கருவளையம் மறைய, கரும்புள்ளிகள் மறைய, உதடுகள் அழகாக, முகம் பொலிவு பெற, எல்லா பிரச்சனைக்கும் சேர்த்து ஒரே தீர்வு. அதுவும் மிக மிக சுலபமாக

face
- Advertisement -

உடலுக்கு தேவைப்படும் சத்துக்களில் மிகவும் முக்கியமானது விட்டமின் ஈ ஊட்டச்சத்து. விட்டமின் ஈ குறைபாடு உள்ளவர்கள் அதை சரி செய்ய, இந்த விட்டமின் ஈ கேப்ஸ்யூல் பயன்படுத்தலாம். இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இது நம் சருமத்தில் தோன்றும் பலவித பிரச்சனைகளை சரி செய்ய கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. முகச்சுருக்கம், கருவளையம், முக தளர்வு, முதுமை தோற்றம், இது போல சருமத்தின் பலவித பிரச்சனைகளை தீர்க்க இந்த விட்டமின் ஈ கேப்சூல் பயன் படுகிறது. தோலை பராமரிக்கும் இந்த விட்டமின் ஈ கேப்சூல்யை கொண்டு, நம் முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எல்லாம் சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வதற்கான பதிவு தான் இது.

முதலில் விட்டமின் ஈ கேப்சூல்லை வைத்து உதட்டிற்கு லிப் பாம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். விட்டமின் ஈ கேப்சூல் ஒன்று, தேன் அரை டீஸ்பூன் இரண்டையும் ஒன்றாக கலந்து இரவு தூங்க செல்லும் முன் உதடுகளில் தடவ வேண்டும். இது இரவு முழுவதும் உங்கள் உதடுகளிலே இருக்கலாம். இதனால் உதட்டின் வறட்சித் தன்மை நீங்கி உதடு அழகாகவும், மென்மையாகவும் இருக்கும்.

- Advertisement -

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க, காபி பவுடர் அரை டீஸ்பூன், ஒரு விட்டமின் ஈ கேப்சூல் 1, தேவையான அளவு தண்ணீர் மூன்றையும் ஒன்றாக கலந்து தினமும் உங்கள் முகத்தில் தேய்த்து ஒரு பத்து நிமிடம் கழித்து முகத்தை அலம்பி விட வேண்டும். இது உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்களை எல்லாம் வெளியேற்றி முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க உதவும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக, ஆலுவேரா ஜெல் அரை டீஸ்பூன், விட்டமின் ஈ கேப்சூல் ஒன்று, இரண்டையும் ஒன்றாக கலந்து இரவு படுக்கும் போது உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் தேய்த்து விட்ட பின் படுக்க செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எப்போதும் போல உங்கள் முகத்தை கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி மாசற்ற முகப்பொலிவு கிடைக்கும்.

- Advertisement -

புருவ முடிகள் அடர்த்தியாக வளர, விளக்கெண்ணெய் அரை டீஸ்பூன், விட்டமின் ஈ கேப்சூல் ஒன்று, தேங்காய் எண்ணெய் அரை டீஸ்பூன், ஆலுவேரா ஜெல் அரை டீஸ்பூன், இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து உங்கள் புருவங்களில் மேல் தொடர்ந்து தடவி வர புருவ முடிகள் வளர்ந்து புருவம் அடர்த்தியாகும்.

கண்களை சுற்றி உள்ள கருவளையம் நீங்க தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன், விட்டமின் ஈ கேப்சூல் ஒன்று இரண்டையும் இரவு படுக்கும் முன், உங்களை கண்களைச் சுற்றி தேய்த்து ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்து விட்டு அப்படியே விட்டு விடுங்கள்.

இதை தொடர்த்து செய்து வாருங்கள், நாளடைவில் உங்கள் கண்களை சுற்றி உள்ள கருவளையம் மறைய தொடங்கிவிடும். இந்த எளிமையான குறிப்புகளை பயன் படுத்தி குறைந்த செலவில், அதிக பயன் அடையுங்கள்.

- Advertisement -