- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவியாபாரம் செழிக்க புதன் பரிகாரம்

வியாபாரம் செழிக்க புதன் பரிகாரம்

- Advertisement -

வியாபாரத்திற்கு காரகத்துவம் பெற்றுள்ளவர் புதன் பகவான். புத பகவான் அருள் இன்றி வியாபாரம் செழிப்பதில்லை. புதனுடைய அருளும், புதன் பகவானுடைய இடமும் சரியாக உங்களுடைய ஜாதகத்தில் இருந்தால், நீங்கள் எதை வணிகம் செய்ய நினைத்தாலும், அது பன்மடங்கு லாபத்தை கொடுக்கும். வியாபாரம் புதிதாக துவங்குபவர்கள் மற்றும் வியாபார விருத்தி வேண்டும் என்று நினைப்பவர்கள் புத பகவானை எப்படி வழிபடுவது? என்னும் ஆன்மிகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

புத பகவானுடைய அருளுடன் நீங்கள் புதிதாக ஒரு வியாபாரம் துவங்க நினைத்தால், அது நல்லபடியாக நடக்கும் என்பது நம்பிக்கை. சிறு தொழிலில் ஈடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள், புதிதாக எதையாவது விற்று வணிகம் செய்ய நினைப்பவர்கள், புத பகவானுடைய அருளோடு அதை செய்யுங்கள். புதன் அருள் பெற புதன் கிழமையில் விநாயகரை வழிபட வேண்டும். புதனும், விநாயகரும் இணைந்து உங்களுக்கு அருள் கொடுத்தால் வெற்றி மேல் வெற்றியை ஈட்டலாம்.

- Advertisement -

தொடர்ந்து 21 புதன் கிழமைகளில் இந்த எளிய பரிகாரத்தை செய்து வாருங்கள். புதன் பகவானுடைய அருளை பெற முதலில் புதன் கிழமையில் விநாயகரை வழிபடுங்கள். 21 புதன் கிழமைகளில் விநாயகர் கோவிலுக்கு சென்று பச்சை அருகம்புல்லை விநாயகருக்கு சாற்றி வழிபட வேண்டும். விநாயகருக்கு அருகம்புல் என்றால் மிகவும் பிடிக்கும். அதனை சாற்றி மனதார பிரார்த்தித்தால் அவருடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பின்னர் புதன் கிழமைகளில் புத பகவானுக்கு ஒரு அர்ச்சனை செய்யுங்கள். யாருடைய பெயரில் வியாபாரத்தை துவங்க இருக்கிறீர்கள் அல்லது யாருடைய பெயரில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறதோ, அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள். பொதுவான பெயராக இருந்தால், முதலாளியின் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள். பின்னர் புதபகவானுக்கு பச்சை நிற வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி வாருங்கள். 21 புதன் கிழமையும் இதை செய்ய வேண்டும்.

- Advertisement -

பின்னர் அங்கு வரும் பக்தர்களுக்கு பச்சைப் பயறு, பச்சை நிற நைவேத்திய பிரசாதங்கள் தயார் செய்து படைத்து வழங்க வேண்டும். ஏழை எளியவர்களுக்கு அன்றைய தினம் நீங்கள் பச்சை வெண்டைக்காயை தானம் செய்ய வேண்டும். வெண்டைக்காயை தானம் செய்தால், வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்கிற ஐதீகம் உண்டு. கஷ்டப்படுபவர்களுக்கும், தெருவோரத்தில் வசிக்கும் ஏழைகளுக்கும் பச்சை வெண்டைக்காயை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு வாங்கி தானம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பொடுகு மறைய டிப்ஸ்

பெரிய பெரிய வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், பெரிய அளவில் வியாபாரம் செழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் புதன் ஸ்தலத்திற்கு சென்று அங்குள்ள வழிபாட்டை மேற்கொண்டு வரலாம். புதன் கல்விக்கு வித்திடுபவன், கலைகளுக்கும், படிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவன். புத்திசாலிகளாக இருக்கவும் புத வழிபாடு அவசியமாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு எப்பொழுதும் புத்தி கூர்மையும் இருக்க வேண்டும், இவற்றை வழங்குபவர் புத பகவான்! புதிதாக வியாபாரம் செய்ய நினைப்பவர்கள், நவகிரகங்களில் புதன் பகவான் சந்நிதிக்கு சென்று புத பகவானுக்கு பச்சை நிற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து, பின்னர் 17 தீபங்களை ஏற்றி வையுங்கள். அதில் பச்சை நிற திரி போட்டு ஏற்றுங்கள். பின்பு அருகில் இருக்கும் பசுக்களுக்கு பச்சை புல்லை தீவனமாக கொடுத்து வாருங்கள். இப்படி செய்தால் வியாபாரத்தில் தடை இல்லாமல் தொடர் முன்னேற்றங்களை காணலாம்.

சற்று முன்