- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவியாபாரத்தில் அதிவிரைவாக முன்னேற தாந்திரீகம்

வியாபாரத்தில் அதிவிரைவாக முன்னேற தாந்திரீகம்

- Advertisement -

வியாபாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர, வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்க, திங்கட்கிழமை காலை 7:00 மணிக்கு வியாபார ஸ்தளத்தில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நீங்கள் சின்ன கடை வைத்திருந்தாலும் சரி, பெரிய அலுவலகம் தொழிற்சாலை எது வைத்திருந்தாலும் சரி, அந்த இடத்தில் இந்த பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும். வியாபாரம் ஓஹோன்னு நடக்க துவங்கும்.

லாபம் பெருக தாந்திரீக பரிகாரம்

திங்கட்கிழமை காலை 7:00 மணிக்கு நீங்கள் தொழில் வியாபாரம் செய்யும் இடத்தில் இதை மட்டும் செய்யுங்கள். ஒரு எச்சில் படாத தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். சில்வர் தட்டாக இருந்தாலும் தவறு கிடையாது. அதில் கொஞ்சமாக குங்குமம், தூள் கற்பூரம் போட்டு, கொஞ்சமாக பால் விட்டு இந்த இரண்டு பொருட்களையும் கரைத்துக் கொள்ளுங்கள்‌. இதில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு இந்த தட்டுக்கு முன்பாகவே அமர்ந்து இந்த மந்திரத்தை 22 முறை படிக்க வேண்டும்.

- Advertisement -

லாபம் பெருக மந்திரம்

ஓம் சகல சம்பத் போகா ததாஸ்து

சுலபமான ஒரு வரி மந்திரம். இந்த மந்திரத்தை சொல்லி முடித்த பிறகு, அந்த தட்டுக்கு முன்பாக அமர்ந்து உங்களுடைய வியாபாரம் படிப்படியாக முன்னேறம் அடைய வேண்டும் லாபம் அதிகரிக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு வேண்டுதல் வையுங்கள். பிறகு அந்த தட்டை அப்படியே சாமி படம் இருக்கும் இடத்தில் பத்திரமாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு 24 மணி நேரம் கழித்து அந்த 1 ரூபாய் நாணயத்தை எடுத்து கல்லாப்பெட்டியில் வைக்க வேண்டும். தட்டில் வைத்திருந்த அந்த பால் மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் அப்படியே எடுத்து ஒரு செடிக்கு கீழே ஊட்டி விட வேண்டும். கட்டாயம் அந்த பால் திரிந்து கெட்டு தான் போகும். அதை பற்றி கவலைப்பட வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: தடைகளை நீக்கும் குலதெய்வ தீபம்

மாதத்தில் ஒரு திங்கட்கிழமை இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் உங்களுடைய வியாபாரம் மேலும் முன்னேற்றம் அடைவதை கண் கூட பார்க்கலாம். அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எல்லா பெட்டியில் சேகரித்துக் கொண்டே வரலாம். சுப செலவுகளுக்காக மீண்டும் எடுத்துப் பயன்படுத்தலாம். தவறு ஒன்றும் கிடையாது. இந்த அதி அற்புதமான பரிகாரம் உங்களுக்கும் பயனுள்ளபடி அமையும் இந்த நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்