உங்கள் தொழில், வியாபாரங்களில் வெற்றி, அதிக லாபம் பெற இதை செய்யுங்கள்

business-shop

ஆதிமனிதனாக இருந்த காலத்தில் உலகில் அனைத்தும் அனைவருக்கும் பொதுவாக இருந்தது. பணம், செல்வம் போன்றவற்றை மனிதன் உருவாக்கிய பின்பு அனைத்திலும் ஏற்ற தாழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்றைய உலகில் நாம் வாழ பணம் கட்டாய தேவை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படியான பணம் நமக்கு அதிகளவில் சேர ஒரு தாந்திரீக பரிகார முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

shop

உலகெங்கிலும் மக்கள் வாழ்வதற்கு உதவும் செல்வத்தை ஈட்டுவதற்கு தங்களுக்கு தெரிந்த வேலைகள் அல்லது தொழில்களை செய்தோ பணம் ஈட்டி வருகின்றனர். ஆனாலும் அதிகளவு செல்வம் ஈட்டவும், தங்களின் திறமையை பயன்படுத்தி குறைந்த காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்க உதவுவது வியாபாரங்கள் தான்.

எப்படிப்பட்ட வியாபாரங்கள் செய்பவர்களும் தங்களின் வியாபாரத்தில் நஷ்டங்கள் ஏற்படாமல் இருக்கவும், வியாபார விடயங்கள் அனைத்திலும் வெற்றி பெறவுமே விரும்புகின்றனர். நீங்கள் செய்யும் வியாபாரங்களில் அதிக லாபங்களை பெறவும், வியாபாரம் மேலும் விரிவடையவும் கீழ்கண்ட ஒரு எளிய தாந்திரீக பரிகாரத்தை நம்பிக்கையோடு சற்று பொறுமை காப்பதால் நற்பலன்களை பெறலாம்.

money

ஒரு வெள்ளி விளக்கில் பௌர்ணமி தினத்தன்று காராம் பசுவின் நெய்யை விட்டு தாமரை தண்டின் பஞ்சுதிரி போட்டு விளக்கேற்றி, ஒரு சங்கை அதில் கவிழ்த்து பிடித்தால் சங்கில் தீப மை கட்டும். அந்த மை எடுத்து அதனுடன் ஜவ்வாது, பட்சை கற்பூரம், புனுகு, கோரோசனை போன்ற பொருட்களை சேர்த்து, குழைத்து வெள்ளி டப்பியில் அடைத்து வைத்து தொழில், வியாபாரம் செய்ய மற்றும் எங்கு செல்வதானாலும் மையை உங்களின் நெற்றி புருவத்தில் திலகமாக வைத்து செல்ல காரிய பலிதம் உண்டாகும். வியாபாரம், தொழில் ரீதியான காரியங்களில் வெற்றிகள் கிட்டும். தனலாபம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
தரித்திர நிலையை போக்கும் எளிய பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Viyabaram pariharam in Tamil. It is also called as Thanthirigam in Tamil or Viyabaram peruga in Tamil or Tholil sirakka in Tamil or Viyabaram vetri pera in Tamil.