வியாபாரத்தில் ஓஹோவென கொடிகட்டி பறக்க வேண்டுமா? லாப மழையில் நனைய தொழில் செய்யும் இடத்தில் இந்த ஒரு சுவாமி படத்தை மாட்டி வைத்தாலே போதும்.

viyabaram
- Advertisement -

ஓஹோவென வியாபாரத்தில் கொடி கட்டி பறந்தவர்கள் எல்லாம் இன்றைய சூழ்நிலையில் வருமானம் இல்லாமல் நஷ்டத்தில் தத்தளித்து வருகின்றனர். இதில் புதியதாக வியாபாரம் தொடங்குபவர்களின் நிலைமை படுமோசமாக உள்ளது. நீங்கள் ஏற்கனவே வியாபாரம் செய்து இடையில் நஷ்டப்பட்டு இருந்தாலும் சரி, புதியதாக வியாபாரம் தொடங்கினாலும் சரி, பின் சொல்லக்கூடிய ஆன்மீக ரீதியான சில விஷயங்களை பின்பற்றி வந்தாலே போதும். வியாபாரத்தில் நிச்சயமாக நீங்கள் நிலையான நல்ல லாபத்தை பெற முடியும். சொந்தத் தொழிலில் காலூன்றி நிற்க நிலையான, வருமானத்தை ஈட்ட உங்களுக்கான பரிகாரம் இதோ.

muperum-deviyar

சொந்தத் தொழில் என்றால் முதலில் நமக்கு தேவையானது முதலீடு, அதாவது பணம். இந்த பணத்திற்கு உரியவள் லட்சுமிதேவி. மகாலட்சுமியின் திருவுருவப்படம் கட்டாயம் தொழில் செய்யும் இடத்தில் இருக்கவேண்டும். பெரும்பாலும் இது எல்லோரும் அறிந்ததுதான். இரண்டாவதாக வியாபாரத்திற்கு நாம் எந்த பொருளை விற்க போகின்றோம். ஏதாவது ஒரு பொருளை வைத்து தானே வியாபாரம் செய்வோம். அந்த பொருளுக்கு உண்டான தெய்வம் துர்க்கை. துர்கா தேவியின் திருவுருவப்படம் தொழில் செய்யும் இடத்தில் கட்டாயம் இருக்க வேண்டும்.

- Advertisement -

மூன்றாவதாக வியாபாரத்தில் நல்லது கெட்டது, தந்திரங்கள், புதிய புதிய யுக்திகளை அனுதினமும் நாம் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு தலைவி சரஸ்வதி. ‘லட்சுமி சரஸ்வதி துர்காதேவி’ இந்த மூவரையும் வியாபாரம் செய்யும் இடத்தில் ஒன்றாக சேர்த்து மாட்டி வைத்தால் நீங்கள் தொழிலில் ஜெயிப்பது உறுதி.

lemon

அடுத்தபடியாக தொழிலில் விரோதம் என்றால், தொழில் முடங்கிப் போகிறது என்றால், அதற்கு காரணம் அடுத்தவர்களின் பொறாமை குணம். கண் திருஷ்டி. இந்த கண் திருஷ்டியை கழிப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளது. அதில் தொழிலில் வரக்கூடிய கண் திருஷ்டி கழிக்க நாம் செய்யக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு திருஷ்டி கழிக்கும் முறை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். மாதத்தில் ஒரு நாள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது அமாவாசை தினமாக இருந்தால் மிகவும் சிறப்பு. அமாவாசை தினத்தில் செய்ய முடியவில்லை என்றால் மற்ற வேறு ஏதாவது ஒரு நாளை கூட நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

உங்கள் வழக்கப்படி கடையை மூடிவிட்டு அதாவது, கடையை அடைப்பதற்கு ஷட்டர் கட்டாயம் இருக்கும். அந்த ஷட்டரை அடைத்துவிட்டு, இறுதியாக வீட்டுக்குச் செல்வதற்கு முன்பு, ஒரு எலுமிச்சம்பழத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை இரண்டாக வெட்டி அதில் இரண்டு பக்கமும் குங்குமத்தை தடவி கடையின் வாசலில் வைத்து விடவேண்டும்.

lemon

அதன்பின்பு உங்களுடைய காலடியை நீங்கள் வடக்கு பக்கம் இரண்டு அடி எடுத்து வைத்துவிட்டு, அதன் பின்பு உங்கள் வீடு இருக்கும் திசைக்கு நடக்கலாம். உங்கள் வீடு வடக்கு திசையை நோக்கித்தான் உள்ளது என்றால் அப்படியே வீட்டுக்கு செல்லலாம். கடையைத் திறந்து வைத்துவிட்டு இந்த பரிகாரத்தை செய்வது நமக்கு பலனைக் கொடுக்காது. கடையை அடைத்துவிட்டு இறுதியாக இந்த பரிகாரத்தை செய்து வீட்டிற்கு செல்லுங்கள். (கடையை அடைப்பதற்கு முன்பு உங்களுக்கு கற்பூரம் ஏற்றும் வழக்கம் இருந்தாலும், தேங்காய் உடைக்கும் வழக்கம் இருந்தாலும் அதை எல்லாம் முடித்துவிட்டு இறுதியாக இந்த எலுமிச்சை பரிகாரத்தை செய்ய வேண்டும்.)

viyabaram

மறுநாள் காலை வந்தவுடன் வாசலில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அதன் பின்பு கடைக்குள் சென்று கடையை சுத்தம் செய்துவிட்டு வாசனை மிகுந்த ஊதுபத்தியை சுவாமி படங்களுக்கு காண்பித்து, கல்லாப் பெட்டிக்கு காண்பித்து, வாசலுக்கு காண்பித்து அதன் பின்பு தீபம் ஏற்றி வைத்து விட்டு நீங்கள் கல்லாப்பெட்டியில் போய் அமர வேண்டும். வியாபாரத்தைத் தொடங்க வேண்டும். மேல் சொன்ன இந்த இரண்டு விஷயங்களை நம்பிக்கையோடு பின்பற்றி பாருங்கள். நொடிந்த உங்கள் வியாபாரம் சில நாட்களிலேயே தலை நிமிர்ந்து நிற்கும்.

- Advertisement -