சுவரில் இருக்கும் அழுக்குகள் நீங்க டிப்ஸ்.

wall cleaning
- Advertisement -

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய சுவர்களில் இருக்கும் அழுக்கை எப்படி சுத்தம் செய்வது என்று நினைப்பதே கிடையாது. என்னதான் நாம் தரையை சுத்தம் செய்தாலும் சுவரில் இருக்கக்கூடிய அழுக்குகளை சுத்தம் செய்யாமல் விட்டு விடுவோம். இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் சுவரில் இருக்கும் அழுக்குகளை எப்படி சுத்தம் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக வருடத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வெள்ளை அடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அதற்கு காரணம் சுவரில் இருக்கக்கூடிய அழுக்குகள் தெரியாமல் வீடு புதிதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களை அறியாமலேயே சுவரில் தங்களால் அழுக்குகளும், கறைகளும் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறார்கள். குழந்தைகள் அவர்களின் விளையாட்டு தனத்தால் சுவரில் கிறுக்குவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். இதனால் வீட்டு சுவரில் அழுக்குகள் ஆங்காங்கே தென்பட்டு வீட்டின் அழகை அதுக்கெடுத்து விடும்.

- Advertisement -

சரி இப்பொழுது வீட்டில் சுவரில் இருக்கக்கூடிய அழுக்குகளை நீக்கும் டிப்ஸை பார்ப்போம். முதலில் வீட்டில் இருக்கக் கூடிய அழுக்குகளை நீக்குவதற்கு நாம் உபயோகப்படுத்துவது பள்ளிக்கூடத்தில் கரும்பலகையில் எழுத உதவும் சுண்ணாம்பு கட்டி. அதாவது சாக்பீஸ். இதில் அதிகப்படியாக சுண்ணாம்பு இருப்பதால் இதை வைத்து நம்மால் எளிதில் சுவற்றை சுத்தம் செய்து விட முடியும்.

எந்த இடத்தில் அழுக்குகள் அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் சாக்பீஸை நீளவாக்கில் வைத்து நன்றாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு ஈரத் துணியை வைத்து சிறிது அழுத்தி துடைத்தால் சுவரின் இருக்கும் பெயிண்ட் எதுவும் வராமல் அழுக்குகள் மட்டும் நீங்கிவிடும். சுவர் புத்தம் புதிது போல் ஆகிவிடும்.

- Advertisement -

அடுத்ததாக சுவரை சுத்தம் செய்வதற்கு நாம் உபயோகப்படுத்த போகும் பொருள்தான் பேக்கிங் சோடா. இந்த பேக்கிங் சோடாவை சிறிது நீரூற்றி கரைத்துக் கொண்டு அதை ஒரு காட்டன் துணியில் தொட்டு அழுக்குகளில் தேய்த்து விட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து மறுபடியும் அதை ஒரு முறை அழுத்தி தேய்த்து விட்டு சுத்தமான தண்ணீரை வைத்து துடைத்து எடுத்தால் அதில் இருக்கக்கூடிய அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும்.

மூன்றாவது ஆக மிகவும் எளிமையான ஒன்றுதான் நாம் வீடு துடைப்பதற்காக உபயோகப்படுத்தும் லைசாட். ஒரு மக்கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு மூடி அளவு லைசாடை ஊற்றி ஒரு துணியால் நன்றாக நினைத்து அழுக்கு இருக்கும் இடத்தில் தேய்த்து விட வேண்டும். அவ்வாறு தேய்க்கும் பொழுதே அதில் இருக்கக்கூடிய அழுக்குகள் நீங்குவதை நம்மால் பார்க்க முடியும். பிறகு சுத்தமான தண்ணீரை வைத்து ஒரு முறை துடைத்து எடுத்து விட்டு காய்ந்த துணியை வைத்து துடைக்கும் பொழுது வீட்டு சுவர் மிகவும் சுத்தமாக வெள்ளை அடித்தது போல் புதிதாக தோன்றும்.

இதையும் படிக்கலாமே: சமையலறைககு தேவையான புத்தம் புது 10 குறிப்புகள்

அதிக செலவு செய்து வீட்டிற்கு சுண்ணாம்பு அடிப்பதற்கு பதிலாக மாதத்திற்கு ஒருமுறையாவது சுவரில் இருக்கக்கூடிய அழுக்குகளை இந்த முறையில் சுத்தம் செய்தால் வீட்டில் இருக்கும் சுவர்கள் என்றென்றும் புதிது போல் காட்சியளிக்கும்.

- Advertisement -