சமையலறைககு தேவையான புத்தம் புது 10 குறிப்புகள்

cooking
- Advertisement -

சமையலறையில் நமக்குத் தெரிந்த விஷயங்கள் 10 இருந்தால், தெரியாத வீட்டு குறிப்பு 100 இருக்கும். அந்த விஷயங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொண்டால் நாம் ஸ்மார்ட் பெண்மணிகளாக மாறலாம். இதுவரை நீங்கள் கேள்விப்படாத ஒரு சில புத்தம்புது சமையலறை குறிப்புகளை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. சமையல் அறைக்கு தேவையான எளிமையான 10 டிப்ஸ் இல்லத்தரசிகளுக்கு இதோ.

குறிப்பு 1:

நீங்கள் அவசர அவசரமாக செய்த பொங்கல் கொஞ்சம் தண்ணீர் ஆகி விட்டதா. ஒரு கைப்பிடி ரவையை அந்த பொங்கலில் தூவி அப்படியே ஒரு கிண்டு கிண்டி சூடு செய்தால் பொங்கல் கட்டியாகி விடும். சில சமயம் பொங்களில் உப்பு அதிகமாகிவிடும். அப்போதும் அதில் சூடாக தண்ணீர் ஊற்றி, இதே போல ஒரு கைப்பிடி ரவையை போட்டு கலந்தால் அந்த உப்பும் குறையும்.

- Advertisement -

குறிப்பு 2:

கடாயில் வரமல்லி 1 கப், இரண்டு அல்லது மூன்று கொத்து கருவாப்பிலை போட்டு, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். மல்லியும் கருவேப்பிலையும் கருகக் கூடாது. வருத்த இந்த இரண்டு பொருட்களும் நன்றாக ஆரிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். இதை எந்த குழம்பு, எந்த வருவலுக்கு போட்டாலும் அதனுடைய ருசி வாசம் இன்னும் இன்னும் கூடுதலாக இருக்கும்.

குறிப்பு 3:

பிளாஸ்டிக் டப்பாகில் இருக்கும் ஸ்டிக்கரை முழுசாக நீக்க முடியலையா? ஒரு அடி கனமான கடாயை நன்றாக அடுப்பில் வைத்து சூடு செய்யுங்கள். ஒரு காட்டன் துணியை அந்த சூடான கடாயில் வைத்து நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். காட்டன் துணி கை பொறுக்கும் அளவுக்கு சூடு இருக்க வேண்டும். அதை எடுத்து பிளாஸ்டிக் மூடி மேலே ஒட்டி இருக்கும், ஸ்டிக்கரில் லேசாக ஒத்தடம் கொடுத்து எடுத்து, பிறகு அந்த ஸ்டிக்கரை நீக்கி பாருங்கள். அந்த ஸ்டிக்கர் சூப்பராக கையோடு முழுசாக வந்துவிடும்.

- Advertisement -

குறிப்பு 4:

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு தக்காளி, கொஞ்சம் புதினா சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பஜ்ஜி மாவோடு கலந்து வாழைக்காய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி சுட்டு பாருங்க. வேற லெவல் டேஸ்ட்.

குறிப்பு 5:

முட்டை ஆம்லெட் செய்ய ஒரு முட்டையை கிண்ணத்தில் ஊத்துறீங்க. இரண்டு ஸ்பூன் தக்காளி சாறையும், அதில் ஊற்றி வழக்கம் போல சால்ட் பெப்பர் ஆனியன் எல்லாம் போட்டு அடித்து கலந்து ஆம்லெட் ஊற்றினால் அந்த முட்டையில் நீச்ச வாடை வீசவே வீசாது. முட்டை ஆம்லெட் சுவையும் டாப்பு டக்கரா இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:

சில நேரங்களில் நாம் செய்யும் குலோப் ஜாமுன் உருண்டை ரொம்பவும் கட்டி போல இருக்கும். பொறித்து எடுத்தாலும் நடுவில் சாஃப்ட்டாக வராது. இப்படிப்பட்ட சமயத்தில் வருத்த குலோப்ஜாம் உருண்டைகளைப் போட்டு, சர்க்கரை ஜீராவில் போட்டு, ஜீராவோட அடுப்பில் வைத்து இரண்டு நிமிடம் சூடு செய்தால் குலோப்ஜாமுன் சாப்ட் ஆக மாறிவிடும்.

குறிப்பு 7:

காம்பு கிள்ளி பச்சை மிளகாய்களை ஒரு டப்பாவில் போட்டு அதில் சிறிது மஞ்சள் பொடியை தூவி பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் பழுக்காமல் இருக்கும். அந்த டப்பாவுக்கு கீழேயும் மேலேயும் ஒரு டிஷ்யூ பேப்பர் போட்டு வச்சுடுங்க.

குறிப்பு 8:

புதுசாக வாங்கிய மண் சட்டியில் வடித்த அரிசி கஞ்சியை ஊற்றி மூன்று நாட்கள் அடுப்பில் வைத்து, கொதிக்க வைத்தால் சீக்கிரம் அது விரிசல் விடாது. தினமும் புது கஞ்சியை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

குறிப்பு 9:

சிக்கன் மட்டன் போன்ற அசைவ பொருட்களை வறுத்தெடுக்கும் போது அதில் கொஞ்சம் எண்ணெய் கூடுதலாக இருப்பது போல தோன்றினால், அதன் மேலே கொஞ்சம் அரிசி மாவை தூவி வறுத்து பாருங்கள். எண்ணெயும் குறையும் அதேசமயம் நீங்கள் வருத்த டிஷ் கொஞ்சம் மொறுமொறுப்பாகவும் வரும்.

இதையும் படிக்கலாமே: காய்கறி, பழங்களில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளை சுத்தம் செய்யும் முறை.

குறிப்பு 10:

இனிமேல் பூரிக்கு மாவு பிசையும் போது அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலைமாவை போட்டு பிசைந்து பாருங்கள். நீங்கள் பூரி சுட்டு எடுக்கும்போது நீண்ட நேரத்திற்கு சுருங்காமல் இருக்கும். பூரியின் நிறமும் சிவந்து கிடைக்கும்.

- Advertisement -