துணி துவைக்க இனி சோப்பு வேண்டாம். வாஷிங்மெஷின் வேண்டாம். கைபடாமல் உங்கள் துணி பட்டுப் போல பளபளப்பாக மாற துணி துவைக்கும் தண்ணீரில் 1 ஸ்பூன் இந்த தூள் கலக்குங்க போதும்.

cloth
- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வாஷிங் மெஷின் இருந்தாலும், வாசிங்மிஷின் இல்லை என்றாலும் துணி துவைப்பது என்பது ஒரு கஷ்டமான வேலைதான். வாசிங்மிஷின் இருந்தால் கூட துணியை சோப்புத் தண்ணீரில் ஊற வைத்து, சோப்பு போட்டு, சட்டை காலர் பகுதிகளில் அழுக்கு போக பிரஷ் போட்டு தான் மீண்டும் அந்த துணிகளை வாஷிங் மெஷினில் போட வேண்டும். ஆனால் காலரில் இருக்கும் அழுக்கு, வெள்ளை துணியில் வேட்டியில் இருக்கக்கூடிய அழுக்கு எல்லாம் பத்து நிமிடத்தில் கைபடாமல் காணாமல் போக ஒரு சூப்பர் ஐடியா இருக்குது. அது என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் ஒரு பக்கெட் அளவு வெதுவெதுப்பான சுடு தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2  ஸ்பூன் தூள் உப்பு போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் கல்லுப்பு இருந்தாலும் அதை இதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். வெதுவெதுப்பான உப்பு சேர்த்த இந்த தண்ணீரில் அழுக்காக இருக்கக்கூடிய 10 லிருந்து 15 துணிகளை போட்டு நனைத்து, 10 லிருந்து 15 நிமிடங்கள் அப்படியே ஊறவைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த உப்பு தண்ணீரில் உங்களுடைய துணிகள் ஊறும்போது அந்தத் துணியில் இருக்கும் அழுக்குகள் அத்தனையும் வெளியேறிவிடும். அதன் பின்பு இன்னொரு பக்கெட்டில் ஷாம்பு 2  ஸ்பூன் அளவு ஊற்றி, சாதாரண பச்சை தண்ணீரை ஊற்றி நுரை வரும் அளவிற்கு கலந்து விட்டு, உப்பு தண்ணீரில் ஊற வைத்திருக்கும் துணியைப் பிழிந்து இந்த சாம்பு தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்துவிடுங்கள்.

ஷாம்பு பயன்படுத்த உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், துணி துவைக்கும் லிக்விட் அல்லது பவுடர் எதை வேண்டுமென்றாலும் துணி ஊறவைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். அது அவரவருடைய விருப்பம் தான். ஆனால் ஷாம்புவில் துணிகளை ஊறவைக்கும் போது துணியில் இருக்கக்கூடிய வண்ணம் சீக்கிரம் மங்கி போகாமல் இருக்கும். துவைத்த துணி வாசமாகவும் இருக்கும்.

- Advertisement -

அவ்வளவு தான். இப்போது ஷாம்புவில் ஊறிக் கொண்டிருக்கும் இந்த துணிகளை எடுத்து அப்படியே தரையில் 2 முறை லேசாக குமிக்கி எப்போதும் போல இரண்டு முறை நல்ல தண்ணீரில் அலசி பிறகு எடுத்து பாருங்கள். காலரில் இருக்கும் அழுக்கு, சோப்பு போடாமல் பிரஷ் போடாமலே சுத்தமாக இருக்கும். வெள்ளை துணிகள் பளிச் பளிச் என மாறி இருக்கும்.

ஷாம்புவில் ஊறவைத்த துணிகளை எல்லாம் லேசாக பிழிந்து வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து, அலசி எடுத்துக் கொண்டாலும் அது உங்களுடைய சவுகரியம். (அப்படி இல்லை என்றால் வெறும் வெதுவெதுப்பான உப்பு தண்ணீரில் துணிகளைஊற வைத்து விட்டு, அதை அப்படியே வாஷிங்மெஷினில் போட்டு வைத்துக் கொண்டாலும் துணி வெள்ளையாக தான் இருக்கும்.) மேல் சொன்ன முறைப்படி துணி துவைக்கும் போது உங்களுக்கு கஷ்டமே தெரியாது. அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். நீங்க வேணும்னா ஒரு வாட்டி ட்ரை பண்ணித்தான் பாருங்களேன். ரிசல்ட்டை பார்க்கும் போதுதான் நமக்கு மன திருப்தி ஏற்படும். ஒருமுறை வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. மனசுக்கு புடிச்சிருந்தா இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க. இல்லைங்க இதெல்லாம் தலை சுத்துற வேலை. நமக்கு சரிப்பட்டு வராது என்றால் விட்டுவிடுங்கள்.

- Advertisement -