வாஷிங் மெஷின்அதிக நாள் உழைக்கனும்னா, இதை சரியாக செய்தாலே போதும். உங்க மெஷின் எப்பவும் புதுசு போலவே இருக்கும்.

- Advertisement -

வீட்டிற்கு தேவையான சில பொருட்களை நாம் வாங்கும் போது அந்த பொருட்களை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு வாங்கும் போது தான் அதன் மூலம் வேலைகள் எளிதாக முடியும். அதுவும் இல்லாமல் அந்த பொருட்களும் நீண்ட நாட்கள் பழுதடையாமல் உழைக்கும். அந்த வகையில் இன்று இந்த பதிவில் நாம் வாஷிங் மெஷின் வீட்டில் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். வாஷிங் மெஷின் இல்லாத வீடு என்று இப்போதெல்லாம் மிகவும் குறைவு தான் ஆனால் அந்த மிஷின் அடிக்கடி பழுதாகி விடாமல் இருக்க ஒரு சில குறிப்புகளை இதில் வீட்டு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்வோம்.

முதலில் வாஷிங் மிஷினில் முடிந்த வரையில் பவுடர் போடவே கூடாது, பெரும்பாலும் இந்த தவறு அனைவரும் செய்வது தான். பவுடர் சேர்த்து துவைக்காமல் வாஷிங் லிக்விட் சேர்த்து துவைகத்தால் மிஷின் அதிக நாட்கள் உழைக்கும். அதே போல் வாஷிங் மெஷினில் லிக்விட் ஊற்ற தனியாக ஒரு பாகம் இருக்கும், அதை மாதத்திற்கு ஒரு முறையாவது எடுத்து சுத்தம் செய்த பின் பயன்படுத்த வேண்டும், இல்லையென்றால் அங்கு உப்புக்கறை படிந்து அந்த இடம் சீக்கிரம் பழுதடைந்து விடும்.

- Advertisement -

வாஷிங் மெஷினை இரவில் மட்டும் மூடி வைத்தால் போதும். பகல் நேரங்களில் வாஷிங் மெஷினை திறந்து வைக்க வேண்டும். அப்போது தான் அதில் வாடை வராமல் இருக்கும். இதே போல் வாஷிங் மிஷினில் டப் கிளீனர் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். இந்த முறையை பயன்படுத்தி மாதத்திற்கு ஒரு முறையாவது உங்கள் வாஷிங் மெஷினை சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் வாஷிங் மிஷினில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி சுத்தமாகும்.

அதே போல் வாஷிங் மிஷினில் நீங்கள் துணி போடும் போது மிஷின் அதன் அளவிற்கு முக்கால் பாகம் வரை தான் துணி போட வேண்டும். மிஷின் முழுவதும் துணி போடவே கூடாது இது மிகவும் முக்கியமான ஒன்று. வாஷிங் மெஷினில் ட்ரம் மேலே பெல்ட் பகுதி இருக்கும். அங்கே நீங்கள் டூத் பிரஷை வைத்து அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் இல்லை எனில் அந்த இடங்களில் அழுக்கு படிந்து மிஷின் ஓடாமல் நின்று விடும்.

- Advertisement -

ஒரே நாளில் இரண்டு, மூன்று முறை துணிகள் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஒரு முறை போட்டு துவைத்த பிறகு குறைந்தது அரைமணி நேரம் இடைவெளி விட்டு தான் அடுத்து முறை துணி போட வேண்டும். இடைவெளி விடாமல் தொடர்ந்து போட்டுக் கொண்டே இருந்தால் மிஷன் மோட்டர் பழுதடைந்து நின்று விடும்.

சில நேரம் அழுக்கு அதிகம் உள்ள துணிகளை நாம் ஊற வைத்து பிறகு தான் மிஷினில் போட முடியும். அப்படி போடும் துணிகளில் ஈரம் நன்றாக பிழிந்த பிறகு தான் மெஷினில் சேர்க்க வேண்டும். டாப்லோட் மிஷினில் பெரிதாக பாதிப்பு ஏதும் இருக்காது. ஆனால் ஃப்ரண்ட் லோடு பயன்படுத்துபவர்கள் அப்படி ஈர துணியை போடும் போது ஈரம் அந்த பெல் பகுதியில் தங்கி விட்டால் மிஷின் சுற்றாமல் நின்று விடும்.

இதையும் படிக்கலாமே: இதெல்லாம் தெரிஞ்ச பிறகு, பத்து ரூபாய்க்கு டூத் பேஸ்ட் வாங்கி முடிக்க வேண்டிய வேலைகெல்லாம், இத்தனை நாள் எவ்ளோ செலவு பண்ணி இருக்கோம்னு கண்டிப்பா பீல் பண்ணுவீங்க.

இவையெல்லாம் மிகவும் சாதாரணமான விஷயம் தான் ஆனால் இதை சரியாக கடை பிடிக்காவிட்டால் கூட வாஷிங் மெஷின் பழுதடைய அதிக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -