வாஷிங் மெஷின் பார்க்கவே ரொம்ப அழுக்கா இருக்கு மாத்தணும்னு நினைக்கிறவங்க இப்படி ஒரு முறை மட்டும் சுத்தம் பண்ணி பாருங்க. இனி பழைய மிஷினை மாத்தணும்கிற எண்ணமே உங்களுக்கு வராது.

washing-mechine4
- Advertisement -

நம் வீட்டில் அன்றாட பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக வாஷிங் மெஷின் மாறி விட்டது. நம்முடைய நேரத்தை அதிகமாக மிச்சப்படுத்தக் கூடிய இந்த வாஷிங்மெஷினை நாம் சரியான முறையில் பராமரிக்கிறோமா என்றால் அது கேள்விக் குறி தான். எந்த பொருளையும் நாம் எந்த அளவுக்கு பராமரித்து பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு அந்த பொருளுடைய பயன்பாடு நீடிக்கும். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் வாஷிங் மெஷினை சுலபமாக எப்படி சுத்தம் செய்து பராமரிப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

வாஷிங்மெஷினை பொறுத்த வரையில் நாம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் நம் போடும் துணிகளில் உள்ள அழுக்குகள் முழுவதும் மெஷினில் ட்ரம், பெல்ட் போன்ற பகுதிகளில் படிந்திருக்கும். நாளாக நாளாக இந்த அழுக்குளே அதிகமாக படிந்து மிஷின் ஓடாமல் நின்று விடக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தும்.

- Advertisement -

அது மட்டும் இன்றி வாஷிங்மெஷினில் துணிகளின் அளவானது மெஷினின் கொள்ளவிற்கு முக்கால் பாகம் வரை தான் போட வேண்டும். முழுவதுமாக போடக் கூடாது. அதே போல் இதில் முடிந்த வரை சோப்பு பவுடருக்கு பதிலாக லிக்விட் பயன்படுத்துவது நல்லது. இது மிஷினின் ஆயுட்காலத்தை அதிகமாக உதவும். இவையெல்லாம் வாஷிங்மெஷினை சரியாக பயன்படுத்துவதற்காக சின்ன சின்ன குறிப்புகள். இப்போது மெஷினை சுத்தப்படுத்துவதை பற்றி பார்க்கலாம்.

வாஷின் மெஷினை சுத்தப்படுத்த சிறிதளவு சமையலுக்கு பயன்படுத்தும் சமையல் சோடா வினிகர் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல குழைத்து வாஷிங் மெஷின் அனைத்தும் தடவி 15 நிமிடம் வரை ஊற விடுங்கள். அதன் பிறகு பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் மெல்லிய ஸ்கிரப்பர் வைத்து தேய்த்த பின்பு ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்த பிறகு வாஷிங் மெஷின் துடைத்து விடுங்கள். துணியில் தண்ணீர் சொட்ட சொட்ட அப்படியே மிஷினை துடைக்க கூடாது.

- Advertisement -

வாஷிங் மெஷின் சுத்தப்படுத்த இன்னொரு முறையும் உண்டு. ஒரு லிட்டர் தண்ணீரை சூடு படுத்தி வெதுவெதுப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்த பின்பு தண்ணீரை நன்றாக ஆற விடுங்கள். அதன் பிறகு இந்த தண்ணீரில் காட்டன் துணியில் போட்டு நனைத்து பிழிந்த பிறகு இந்த துணியை கொண்டு மிஷின் முழுவதும் துடைத்து விடுங்கள். உப்புக்கறை அழுக்கு போன்றவை எல்லாம் நீங்கி விடும்.

மேற் சொன்ன முறைகள் எல்லாம் வாஷிங் மெஷின் மேல் புறங்களை எல்லாம் சுத்தம் செய்ய எளிமையாக இருக்கும். ஆனால் மிஷின் உள்ளே இருக்கும் பகுதிகளை எல்லாம் சுலபமாக சுத்தம் செய்ய இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு எழுமிச்சை பழத்தை எடுத்து அதை இரண்டாக நறுக்கி அதன் மேல் நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் வைத்து வாஷிங் மெஷின் போட்டு விடுங்கள். அதன் பிறகு மெஷினில் பெல்ட் இருக்கும் பகுதிகளில் கொஞ்சமாக சமையல் சோடா வினிகர் இரண்டையும் கலந்து பேஸ்ட் போல குறைத்து தேய்த்து விட்டு மெஷினை டெலிகேட் மோடில் ஓட விட்டு விடுங்கள். இதே முறையில் வாஷிங்மெஷினில் சோப்பு பவுடர் போடும் இடத்தை கூட சுத்தம் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

வாஷிங் மெஷினை இப்படி எளிமையான முறையில் சுத்தம் செய்து விட்டால் மிஷின் எப்போதும் புதிது போல இருக்கும். உப்புக் கறை அழுக்குகள் எல்லாம் படியாது. அதே போல் வாஷிங் மெஷினில் உள்ளே இருக்கும் பெல்ட், ட்ரம் போன்ற பாகங்கள் கூட நீண்ட நாட்கள் பழுதாகாமல் உழைக்கும்.

இதையும் படிக்கலாமே: கற்பூரம் தானே என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இந்த கற்பூரத்தை வைத்து என்னென்ன செய்யலாம் என்று தெரிந்தால் நீங்கள் வாயடைத்து போவீர்கள்.

நீங்கள் புதிதாக வாஷிங் மெஷின் வாங்கி இருந்தால் அதை சுத்தம் செய்ய இந்த முறைகளை எல்லாம் பயன்படுத்தாமல் சேவை நிறுவனங்களை தொடர்பு கொண்டு செய்து கொள்ளுங்கள் ஏனென்றால் அதற்கெல்லாம் கால அவகாசங்கள் இருக்கும். இந்த முறையில் உங்களுடைய பழைய வாஷிங் மெஷின் சுத்தப்படுத்தி கொண்டால் புதிய மெஷின் வாங்க வேண்டிய அவசியமே இருக்காது.

- Advertisement -