வாஷிங் மிஷினில் துவைத்த துணியில், இனி ஒரு சுருக்கம் கூட இருக்காது. துணி அலசும் தண்ணீரில் 1 ஸ்பூன் இந்த பொருளை சேர்த்தால், வாஷிங் மெஷினே துணிகளை அயன் செய்து கொடுத்து விடும்.

washing-mechin
- Advertisement -

கையில் துணிகளை துவைக்க முடியவில்லை என்பதால் தான் வாஷிங் மெஷின் வாங்குகின்றோம். ஆனால் வாஷிங் மெஷினில் துணி துவைப்பது, கையில் துணி துவைப்பதை விட, மிக மிக சிரமமான காரியமாக இருக்கிறது. கையில் சோப்பு போடாமல், பிரஷ் போடாமல், ஊற வைக்காமல், அப்படியே துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தால் அழுக்கு போகவில்லை. துணிகளை வாஷிங் மெஷினில் இருக்கப்பிழிவதால் துணிகள் அதிகமாக சுருக்கம் அடைகிறது. இப்படி எல்லாம் பிரச்சனை. சோப்பு போடாமல், பிரஷ் போடாமல் வாஷிங் மெஷில் துணிகளை போட்டு துவைத்தாலும் அழுக்கு சுத்தமாக நீங்க ஒரு குறிப்பையும், வாஷிங்மெஷினில் துணி சுருக்கம் இல்லாமல் அலசி பிழிந்து கிடைப்பதற்கு ஒரு சின்ன பயனுள்ள குறிப்பு இதோ உங்களுக்காக.

வாஷிங் மெஷினில் துவைக்கும் துணிகள் சுத்தமாக அழுக்கு போக:
உங்களுடைய வீட்டில் எத்தனை அழுக்கு துணிகள் இருக்கிறதோ அந்த துணிகளுக்கு ஏற்ப தண்ணீரை பக்கெட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு சோப்புத்தூளை அந்த தண்ணீரில் போட்டு, கரைத்து துணிகளை முதலில் அதில் ஊற வைத்து விடுங்கள். துணி, சோப்பு தண்ணீரில் நன்றாக ஊறிய பின்பு எடுத்து வாஷிங் மிஷினில் போட்டு துவைக்கும் போது துணிகளில் இருக்கும் அழுக்கு நன்றாக சுத்தமாகும்.

- Advertisement -

வாஷிங்மெஷினிலேயே பவுடரை போட்டு, துணியை போட்டு ஊற வைக்கும் போது அவ்வளவு நல்ல ரிசல்ட் நமக்கு கிடைக்காது. காரணம் வாஷிங்மெஷினில் நிறைய தண்ணீர் எடுக்கும். அதில் நாம் எவ்வளவுதான் பவுடரை கொட்டினாலும் துணிகளில் அந்த பவுடர் செயல்படுவதில் கஷ்டம் இருக்கும். அதனால்தான், தேவையான அளவு தண்ணீரில் பவுடரை போட்டு, ஊறவைத்து மிஷினில் போடும்போது சீக்கிரமாக அழுக்கு போய்விடும். நீங்க வேணும்னா இந்த சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.

வாஷிங் மெஷினில் துவைத்த துணி சுருக்கம் இல்லாமல் கிடைக்க:
இதற்கு இரண்டு குறிப்புகளை நாம் பார்க்க போகின்றோம். முதல் குறிப்பு. இதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் கான்பிளவர் மாவு. இந்த மாவை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு, 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, கரைத்து அதை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். வாஷிங் மெஷின் இரண்டாவது முறை தண்ணீர் எடுத்து அலசும் அல்லவா. அப்போது, வாஷிங் மெஷின் உள்ளே சுற்றக்கூடிய இடத்தில் சின்ன சின்ன ஓட்டைகளோடு சாஃப்ட் கண்டிஷனர் ஊற்றுவதற்கு ஒரு இடம் இருக்கும்.

- Advertisement -

கம்போர்ட் டெட்டால் எல்லாம் அதில் தான் ஊற்றுவோம். அதில் நீங்கள் கரைத்து வைத்திருக்கும் இந்த கான்பிளவர் மாவை ஊற்றி துணிகளை இறுதியாக அலசும் போது, துணிகளில் அவ்வளவாக சுருக்கம் பிடிக்காது. துணிகளில் இருக்கும் அழுக்கு போவதற்கும் இந்த கான்பிளவர் மாவு நமக்கு உதவி செய்யும். இப்படி துணிகளை அலசி காய வைத்த பிறகு, அந்த துணிகள் அயன் செய்தது போலவே இருக்கும்.

இரண்டாவதாக ஒரு குறிப்பு. இதற்காக நாம் பயன்படுத்தப் போகும் பொருள் ஐஸ் கட்டிகள். இதை எப்படி பயன்படுத்துவது. துணிகள் வாஷிங் மெஷினில் நன்றாக பிழிந்து கிடைக்கும். துணிகள் முழுவதுமாக துவைத்து பிழிந்து முடித்த பிறகு, துவைத்து பிழிந்த காய போட தயாராக இருக்கும் அந்த துணியை கொஞ்சமாக ஐஸ் கட்டிகளை(2 ட்ரே ஐஸ் கட்டிகள்) போட்டு மீண்டும் அந்த துணிகளை ஒரு முறை பிழிந்து எடுத்தால் துணிகளில் இருக்கும் சுருக்கம் குறையும்.

இதையும் படிக்கலாமே: இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால், நிச்சயமாக அந்த தங்கம் உங்களோடு நிரந்தரமாக இருக்காது. ஆசை ஆசையாக வாங்கிய தங்கம், உங்கள் கையை விட்டு போக நீங்கள் செய்யும் இந்த தவறும் ஒரு காரணம் தான்.

எப்போதுமே வாஷிங்மெஷினில் துணிகள் துவைத்த உடனே உடனடியாக அதை மெஷினில் இருந்து எடுத்து நன்றாக உதறி காய வைக்க வேண்டும். அப்போதுதான் சுருக்கங்கள் அதிகமாக தெரியாது. உங்களுக்கு மேலே சொன்ன குறிப்புகள் பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள். வொர்க் அவுட் ஆச்சுன்னா இதையே தொடர்ந்து பின்பற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -