அழுக்கடைந்த வாஷ்பேஷன், பாசி பிடித்த சிங்க், உப்பு கறை போன்றவற்றை 10 நிமிடத்தில் சிரமம் இல்லாமல் சுத்தம் செய்வது எப்படி?

sink-basin-cleaning
- Advertisement -

கை கழுவ பயன்படும் வாஷ்பேஷனாக இருந்தாலும் சரி, சமையலறையில் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் சிங்க்காக இருந்தாலும் சரி அடிக்கடி தண்ணீர் தேங்கி அதில் உப்பு கறையும், அழுக்குகளும் விரைவாக சேர்ந்து கொள்ளும். இதை அடிக்கடி சுத்தம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை நாட்பட்ட கறைகளை நீக்குவது என்பது சிரமமாகிவிடும். இந்த இடங்களில் இருக்கும் நாட்பட்ட கறைகளை எப்படி எளிதாக நீக்குவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பாத்திரம் கழுவ பயன்படுத்தும் சிங்கிள் பாத்திரம் கழுவி முடித்ததும் அதன் அடிபாகத்தை மட்டும் நாம் தேய்த்து கழுவி சுத்தம் செய்து விடுவோம் ஆனால் நான்கு புறங்களிலும் இருக்கும் ஓரங்களை கண்டு கொள்வதே கிடையாது. இதனால் நாளுக்கு நாள் அதில் அழுக்குகள் கண்ணுக்கு தெரியாமல் சேர்ந்து பாசிப்பிடிக்க ஆரம்பித்துவிடும். உப்பு கறையும் சேர்ந்து கொள்ளும். இது விடாப்பிடியாக படிந்து சுத்தம் செய்வதே கடினம் ஆகிவிடும்.

- Advertisement -

அதே போல வாஷ்பேஷனிலும் அடிக்கடி சோப் போட்டு சுத்தம் செய்தாலே பளிச்சென இருக்கும். ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டால் அழுக்குகளும், உப்பு கறையும் சேர்ந்து பார்ப்பதற்கு நிறம் மங்கி அழுக்காக காணப்படும். இத்தகைய வாஷ்பேஷன் அழுக்குகள், சிங்க் அழுக்குகள், உப்புக்கறை போன்றவற்றை ரொம்ப சுலபமாக நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?

வாஷிங் சோடா எனப்படும் சலவை சோடாவை இதற்கு நாம் பயன்படுத்தலாம். வாஷிங் சோடா என்பது சமையலுக்கு பயன்படும் சோடா அல்ல! இது துணிகளை வெளுக்க பயன்படுத்தும் சோடா ஆகும். சூப்பர் மார்க்கெட் அல்லது மிகப்பெரிய மளிகை கடைகளில் கிடைக்கும் இதை வாங்கி வந்து சிங்க் மற்றும் வாஷ்பேஷன் முழுவதும் தூவி விடுங்கள். பின்னர் அதன் மீது நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் வினிகர் கொஞ்சம் ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் எல்லா இடங்களிலும் படும்படி தேய்த்து ஊற விட்டு விடுங்கள்.

- Advertisement -

நன்கு ஊறிய பிறகு இரும்பு ஸ்கிரப்பர் கொண்டு லேசாக தேய்த்தால் உப்பு கறை, அழுக்குகள் அனைத்தும் ரொம்ப சுலபமாக நீங்கி வந்துவிடும். இதே போல பாத்திரம் கழுவும் சிங்கின் ஓரங்களிலும் தேய்த்து விட்டால் பாசி பிடித்த கறைகள், அழுக்குகள் போன்றவை ரொம்ப எளிதாக வந்துவிடும். அதன் பிறகு மீண்டும் ஒரு முறை சாதாரண டிடர்ஜென்ட் பவுடர் அல்லது விம் லிட் போன்றவற்றை ஊற்றி தேய்த்து சுத்தப்படுத்திவிட்டால் புதிது போல பளிச்சென ஆகிவிடும். ரொம்பவே சுலபமாக இதை கையாண்டு நம்முடைய வாஷ்பேஷன் மற்றும் சிங்க் போன்றவற்றை உப்பு மற்றும் அழுக்குகளில் இருந்து பாதுகாக்கலாம்.

வாஷிங் சோடாவில் நுரைக்காது என்பதால் கடைசியாக ஒருமுறை நீங்கள் டிடர்ஜென்ட் பவுடர் போட்டு தேய்த்து விடுங்கள். இது போல டைல்ஸ்களில் இருக்கும் உப்பு கறையை போக்கவும், வாஷிங் சோடா மற்றும் வினிகரை சேர்த்து பயன்படுத்தலாம். துணிகளில் இருக்கும் விடாப்பிடியான கறைகளில் கொஞ்சம் வாஷிங் சோடா, வினிகர் சேர்த்து தேய்த்தால் கறை ரொம்பவே எளிதாக நீங்கிடும். கழிப்பறையை சுத்தம் செய்யவும் இது போல வாஷிங் சோடாவுடன், வினிகர், எலுமிச்சை பழ சாறு போன்றவற்றை ஊற்றி தேய்த்து கொடுக்கலாம்.

- Advertisement -