இட்லி உப்புமா மாதிரி மீந்து போன இட்லியில், ‘இட்லி மஞ்சூரியன்’ 10 நிமிஷத்தில் செஞ்சி அசத்தி பாருங்க! உங்க வீட்ல 1 இட்லி கூட இனிமே வீணாகாது.

idly-manchurian3
- Advertisement -

பொதுவா இட்லி மீந்து போனால் நாம் அதை உதிர்த்து உப்புமா செய்து விடுவோம். அதையும் கூட சில பேர் செய்யாமல் வீணாக குப்பையில் எறிந்து விடுவார்கள். ஆனால் இட்லி உப்புமாவை விட இட்லி மஞ்சூரியன் செய்து பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும். இட்லியில் மஞ்சூரியன் செய்வதா? என்று யோசிக்காதீர்கள்! மிக மிக சுலபமாக ’10 நிமிடத்தில்’ செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இவ்வளவு ஏன் இட்லியை பிடிக்காதவர்கள் கூட இந்த இட்லி மஞ்சூரியன் ருசித்து சாப்பிடுவார்கள் என்றால் பாருங்களேன்! இந்த இட்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்று இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

idly-manchurian

இட்லி மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்:
மீண்டு போன இட்லி – 3, சீரகம் – 1/4 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – 1 பெரியது, குடைமிளகாய் – 1/2, தக்காளி – 1.
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மல்லித் தூள் – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன், சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்.
கருவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

இட்லி மஞ்சூரியன் செய்வதற்கு முதலில் மீந்து போன இட்லிகளை சதுரம் சதுரமாக கத்தியால் வெட்டிக் கொள்ளுங்கள். வெட்டிய இட்லி துண்டுகளை சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

idly-manchurian2

ஜீரகம் பொரிந்து வந்ததும் அதனுடன் பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, பொடிதாக நறுக்கிய வெங்காயம் இவைகளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கியதும் அதில் குடைமிளகாய் சேர்த்து வதங்கியதும் பின் தக்காளி சேர்த்து வதக்கவும். அனைத்தும் சுருள வதங்கியதும் உங்களிடம் சோயா சாஸ் இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் விட்டு விடலாம்.

- Advertisement -

பின்னர் மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். மசாலாவில் இருக்கும் பச்சை வாசம் போனதும் பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை போட்டு பிரட்டிக் கொள்ளுங்கள் ஒரு 2 நிமிடம் வதக்கி விட்டு அதன் மீது நறுக்கிய மல்லித்தழை அல்லது வெங்காயத்தாள் தூவி இறக்கி விடுங்கள், அவ்வளவு தான் சுவையான ‘இட்லி மஞ்சூரியன்’ தயார்.

idly-manchurian1

இட்லி மஞ்சூரியன் 2:
இட்லி மீந்துவிட்டால் உடனே என்ன செய்வது என்று தெரியாமல் தூக்கி எரிந்து விடாதீர்கள். நறுக்கி வைத்த இட்லி துண்டுகளுடன் இஞ்சி பூண்டு விழுது, கடலைமாவு, கான்பிளவர் மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், ஃபுட் கலர்(ரெட்), சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொண்டு ஐந்தாறு துண்டுகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்கள். மேலே வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும். இதுவும் ஒருவிதமான இட்லி மஞ்சூரியன் தான். செம டேஸ்டாக அட்டகாசமாக இருக்கும். இரண்டு முறையிலும் செய்து பார்த்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
இந்த பொருள் இல்லாம கூட 10 நிமிஷத்துல சாம்பார் வெக்கலாமா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Idli manchurian seivathu eppadi Tamil. Idli manchurian recipe. Idli manchurian recipe in Tamil. Idli manchurian in Tamil. Idli manchurian home cooking.

- Advertisement -