குடும்பத்தில் அமைதி நிலவி வளம் பெற ஜல தீபத்தை இப்படி ஏற்றுங்கள்.

jala deepam

ஜலம் என்றால் தண்ணீர் என்று பொருள்படும். ஜல தீபம் என்பது தண்ணிரை கொண்டு ஏற்றக் கூடிய ஒரு தீபம் ஆகும். நீரினால் நெருப்பை கொண்டு விளக்கேற்றி வைப்பதால் பஞ்ச பூதங்களின் ஆற்றலும் இந்த தீபத்திற்கு இருக்கும். ஜல தீபம் குபேரனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். எனவே இது குபேர ஜல தீபம் என்றும் போற்றப்படுகிறது. இந்த விளைக்கை ஏற்றுவதால் இல்லத்தில் செல்வம் தங்கும். எதிர்மறை சக்திகள் அண்டாது. குடும்பத்தில் அமைதி நிலவும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜல தீபத்தை எப்படி ஏற்றுவது என்று இப்பதிவில் இப்போது காணலாம்.

jala deepam

ஒரு அழகிய தட்டை எடுத்து மலர்களால் அலங்கரித்து கொள்ளவும். அதன் மேல் கண்ணடியாலான சிறிய அளவிலான பவுல் அல்லது மட்பாண்டத்தாலான சிறிய பானையை வைத்து கொள்ளலாம். அதில் ஜலம் இரண்டு பங்கு ஊற்றி கொண்டு அதன் மேல் நல்லெண்ணை ஒரு பங்கு ஊற்றவும். நல்லெண்ணை இல்லையேல் நீங்கள் உபயோகிக்கும் பூஜைக்கு உகந்த எண்ணெயை ஊற்றி கொள்ளலாம்.

இப்போது எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும். நீரும் எண்ணெயும் சேராது அல்லவா? அதன் மேல் பஞ்சு திரி இரண்டை ஒன்றாக திரித்து எண்ணெயில் தோய்த்து வைத்து கொள்ளவும். திரி மூழ்காமல் இருக்க வெற்றிலை வைக்கலாம். அந்த வெற்றிலையின் மேல் திரியை வைத்து பின்னர் தீபம் ஏற்றலாம். அல்லது ஜல தீபதிற்கு என்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் திரிகளை வாங்கி வைத்து கொண்டு அதிலும் ஏற்றலாம். திரி நீரில் மூழ்காமல் இருக்கவே இந்த வழி முறைகளை கையாள்கிறோம்.

jala deepam

இந்த தீபத்தை வியாழன் அன்று மாலை ஏற்றுவது சிறந்தது. குபேர பகவானுக்கு உகந்த கிழமை வியாழன் ஆகும். எனவே வியாழன் மாலை ஏற்றி விட்டு அதனை வெள்ளி, சனி வரை அணையாமல் மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும்படி பார்த்து கொள்ளவும். சனிக்கிழமை மாலை பூஜை முடிந்தவுடன் நீக்கி விடலாம். அந்த ஜோதியின் நிழல் இல்லத்தில் இருக்கும் எல்லா கெட்ட சக்திகளையும் ஒழித்து விடும். அனைத்து தேவதைகளின் அருளும் கிட்டும். நீரின்றி எதுவும் இல்லை. அத்தகைய நீரில் ஏற்றும் தீபமானது சிறப்பு வாய்ந்தது தான். மிகவும் எளிமையாக அனைவரும் பின்பற்றக் கூடிய சிறப்பு மிகு வழிமுறையும் தான்.

- Advertisement -

இவ்வாறு உங்களால் முடிந்த அளவிற்கு தொடர்ந்து செய்வதால் எண்ணற்ற பலன்கள் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கப் பெரும். வீட்டில் இறையருள் முழுமையாக நிறைந்திருக்கும். அந்த ஜோதியை பார்ப்பதால் மனதில் ஒருவித சாந்தம் குடிகொள்ளும். மனம் ஒருநிலைபடும். மன இறுக்கம் தளர்ந்துவிடுவதை நீங்களே உணர்வீர்கள். குடும்பத்தில் எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுபீட்க்ஷம் உண்டாகும். லக்ஷ்மி குபேர பூஜை நீங்கள் செய்வதானால் அந்த பூஜையில் சிறப்பம்சமாக இந்த விளக்கை ஏற்றி வழிபடலாம்.

jala deepam

எந்த பூஜையையும் நாம் முழு மனதுடன் ஆத்மார்த்தமாக பக்தி சிரத்தையுடன் மேற்கொள்வதால் மட்டுமே அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். மனதில் நல்ல எண்ணங்கள் விதைத்து தன்னலம் கருதாமல் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும். குடும்பம் நோய் நொடி இன்றி நலமுடன் இருக்க வேண்டும். மனித உயிர் ஒவ்வொன்றும் இறையருள் பெற்று சகல வளமும் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விளக்கேற்றுங்கள். வளம் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
செல்வம் கொழிக்கும் குபேர பானை வழிபாடு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Jala deepam in Tamil. Jala deepam eppadi yetruvathu in Tamil. Jala deepam benefits in Tamil. Jala deepam vazhipadu in Tamil.