பூமிக்கு அடியில் முளைத்த சிவலிங்கம். அதை எப்போதும் அபிஷேகிக்கும் அதிசய நீரூற்று

lingaml
- Advertisement -

இந்தியாவில் உள்ள பல கோவில்களில் நாம் பலவிதமான அதிசயங்களை கண்டிருப்போம். அந்த வகையில் திரியம்பகேஸ்வரர் என்னும் சிவன் கோவிலில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒரு நீரூற்று அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

lingam

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் இருந்து சுமார் 28 கிமீ தொலைவில் உள்ளது திரியம்பகேஸ்வரர்  கோவில். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முப்பு தோன்றிய சுயம்பு வடிவிலான மூன்று சிவலிங்கங்கள் இங்கு உள்ளன. மற்ற சிவலிங்கங்களை போல் அல்லாமல் இங்குள்ள லிங்கங்கள் தரைமட்டத்திற்கு கீழே உள்ளன.

- Advertisement -

இந்த கோவிலின் கருவறையில் தானாக ஒரு ஊற்று தோன்றி அதில் இருந்து வரும் நீர் எப்போதும் இங்குள்ள லிங்கங்களை அபிஷேகம் செய்துகொண்டே இருக்கிறது.

இந்த நீர் ஊற்று எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? என்பதெல்லாம் இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. அதே போல் இந்த நீரூற்று அபிஷேகம் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து நடக்கறது என்பதும் இதுவரை தெரியவில்லை.

- Advertisement -

triyambakeswarar lingam

நீர் ஊற்றுக்கான வரலாற்று கதை

கடுமையான பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில் பிரம்மகிரி என்ற கிராமத்தில் கவுதம ரிஷியும் அவரது மனைவியான அகல்யாவும் மழை வேண்டி கடும் தவம் மேற்கொண்டனர். இவர்களின் கடும் தவத்தினால் அந்த ஊரில் மழை பெய்தது. ஆனால் மற்ற பகுதிகள் அனைத்தும் மழை இல்லாமல் பஞ்சத்தில் தான் தவித்து வந்தது. தங்கள் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்காக மற்ற முனிவர்கள் கௌதமரின் ஆசிரமத்திற்கு வந்து குடியேறினர். அதில் சில முனிவர்களுக்கு கவுதம ரிஷியின் மேல் பொறாமை ஏற்பட்டது. ‘அவரது தவ வலிமை சக்தி வாய்ந்ததாக இருப்பதால் தான் கவுதம ரிசஷியால் சிறந்து விளங்க முடிகின்றது’, அவரது ஆசிரமமும் சிறப்பாக இருக்கிறது. அதனால் அவரது தவ வலிமையை குறைக்க சூழ்ச்சி செய்தனர். அவரை எப்படியாவது அந்த இடத்திலிருந்து விரட்டிவிட வேண்டும் என்று எண்ணினர்.

- Advertisement -

கெட்ட எண்ணமும் சூட்சுமமும் தெரிந்த ஒரு முனிவர் பார்வதிதேவியின் தோழியில் ஒருவரான ஜெயா என்ற வன தேவதையை அழைத்து ஒரு பசுவாக மாறச் செய்து கவுதம முனிவரின் ஆசிரமத்தில் மேய விட்டனர். இதனைப் பார்த்த கவுதம ரிஷி அந்த பசுவினை தர்ப்பையை எடுத்து துரத்திவிட்டார். ஒரு மாயையால் உருவாக்கப்பட்ட பசு என்பதால் அது இறந்தது போல் நடித்தது. அந்தப் பழி கவுதம ரிஷியின் மேல் விழுந்தது.

கவுதம ரிஷி பசுவை கொன்றதாக குற்றம் சாட்டி விட்டனர். பசுவைக் கொன்ற தோஷம் நீங்க வேண்டும் என்றால் பிரம்மகிரி மலையை 108 முறை சுற்றி வர வேண்டும் என்றும், 1008 லிங்கங்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.

triyambakeswarar lingam

ஆனால் பிரம்மகிரி மாலையை கவுதம ரிஷியினால் 108 முறை வலம் வர போதிய வலிமை இல்லை. மண்ணினால் உருவாக்கப்பட்ட 1008 சிவலிங்கங்கள் மட்டும் பூஜை செய்து வந்தார். அதன் பலனாக சிவபெருமான் நேரில் தோன்றி கவுதம ரிஷி குற்றமற்றவர் என்று கூறிவிட்டார்.

சிவபெருமானின் தரிசனம் பெற்ற கவுதம ரிஷி தமக்குத் தீமை அளித்த முனிவர்களின் தோஷமும், பாபமும் நீங்க வேண்டும் எனவும், அவர்களின் தீய எண்ணங்கள் நீங்கி விமோசனம் கிடைத்து, நாடு முழுவதும் செழிப்பாக மக்கள் வாழ்வதற்கு தண்ணீர் வளம் வேண்டும் என்றும் வரம் கேட்டார்.

இதற்கு செவி சாய்த்த சிவபெருமான் தனது ஜடாமுடியில் இருந்து சிறிது கங்கை தீர்த்தத்தை வரவழைத்து கவுதமரிடம் ஒப்படைத்து மறைந்துவிட்டார். சிவபெருமான் கொடுத்த அந்த தீர்த்தம் தான் இன்றும் பிரம்மகிரி மலையில் இருந்து கோதாவரி அல்லது கவுதம நதி என்ற பெயரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நீரில் தீய எண்ணங்களைக் கொண்ட முனிவர்களை நீராடி தங்களது பாவத்தை போக்கிக் கொள்ளும்படி கூறினார். அந்த சமயம் அந்த கோதாவரி ஆறு மீண்டும் மறைந்துவிட்டது. கவுதம ரிஷி தன் தவ வலிமையால் மீண்டும் அந்த ஆற்றினை உருவாக்கினார். இந்த சம்பவத்திற்கு பின்பு நாடு செழிப்பாக பஞ்சத்திலிருந்து மீண்டு வந்துவிட்டது.

triyambakeswarar lingam

இந்த நதியானது இன்றளவும் மலையிலிருந்து தோன்றி ஒரு சிறு தொட்டியில் நிரப்பி பின், மீண்டும் மறைந்து குசாவர்த்தம் என்னும் குளத்தில் வெளிப்படுகிறது. பின்பு கோதாவரி நதியாக திரியம்பகேஸ்வரர் கோவில் முன்பு கோடி தீர்த்தமாக உருவெடுத்து இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது வரலாறு.

ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் கூறப்பட்டாலும், அறிவியல் ரீதியாக, இங்கு நடக்கும் அதிசயத்திற்கான காரணங்கள் இதுவரை புலப்படவில்லை. அறிவியலால் அறிய முடியாத பல ரகசியங்கள் நம் நாட்டில் பல உண்டு என்பதற்கான ஒரு சிறந்த சான்று இந்த நீரூற்று அபிஷேகம் என்றே கூறலாம்.

- Advertisement -