Whatsapp : வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய அப்டேட் . முக்கிய நபரின் சேட் திரையின் மேலே தெரிய இதனை செய்தால் போதும்

Whatsapp
- Advertisement -

வாட்ஸ்அப் செயலி மொபைல் போன்களில் அறிமுகமாகி இந்த ஆண்டோடு 10 ஆண்டுகளாகிறது. உலக அளவில் அதிகமாக மெசேஜ் செய்ய பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்அப் முதலிடத்தில் உள்ளது. தற்போது உள்ள சூழலில் வாட்ஸ்அப் உபயோகிக்காமல் வெகு சிலரே உள்ளனர். இளைஞர்கள் மற்றும் நடுத்தர ஆண், பெண் என அனைவரும் வாட்ஸ்அப் உபயோகிக்காமல் அவர்களால் இருக்க முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது.

watsapp

அந்த அளவிற்கு இந்த செயலி மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் வாட்ஸ்அப் நிறுவனமும் ஒவ்வொரு முறையும் புதிதுபுதிதாக அப்டேட் செய்து கொண்டே வருகிறது. தற்போது மீண்டும் ஒரு அப்டேட் வாட்ஸ்அப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொள்ளவே இந்த பதிவு. இந்த பதிவில் வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ள புதிய அப்டேட் பற்றி எளிமையாகவும், எளிதாகவும் புரிந்து கொள்ளும்படி எழுதியுள்ளோம்.

- Advertisement -

முக்கிய அப்டேட்டாக தற்போது வந்திருப்பது பின்னுடு சேட். இதன் விவரம் அதிகப்படியான மெசேஜ்களை அனுப்புவராக இருந்தால் அதில் உங்களுக்கு முக்கியமான ஒருவரை சேட் பகுதியின் மேலே எப்போதும் வைத்துக்கொள்ள கீழ்வரும் இதனை செய்ய வேண்டும்.

* வாட்ஸ்அப் செயலினுள் செல்ல வேண்டும்.
* பிறகு உங்களுக்கு தேவையான நரின் சேட்டினை தேர்ந்தெடுக்கவும்.
* அந்த நபரின் சேட்டினை லாங் பிரஸ் செய்தால் அதில் டாட் சிம்பல் காண்பிக்கும்.
* அந்த டாட்டினை கிளிக் செய்தால் 4 ஆப்ஷன் காண்பிக்கும். அவைகள் முறையே டெலீட், மியூட், ஆர்ச்சிவ்
மற்றும் பின்
* அதில் நீங்கள் பின் ஐகானை தேர்வு செய்தால் நீங்கள் தேர்வு செய்த நபரின் மெசேஜ்கள் இனிமேல் சேட்
பகுதியின் டாப்பில் தெரியும்.
* இதுபோன்று மூன்று நபரின் சேட்களை நீங்கள் பின் செய்ய முடியும்.

watsapp

மேலும் ஸ்டார்இட் என்ற பயன்பாட்டினையும் நீங்கள் பயன்படுத்தமுடியும். இதன் மூலம் தேவையான ஒரு மெசேஜ் மட்டும் எப்போதும் நீங்கள் விரைவாக காணலாம். மேலும் இனி வாட்ஸ்அப்பில் இருந்தே இ- மெயிலும் அனுப்ப முடியும். அதனையும் புதிய அப்டேட்டாக வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -