காலெண்டரை பார்க்காமல் ராகு காலத்தை கண்டறிய மிக எளிய வழி

ragu-kedhu
- Advertisement -

ராகு காலத்தில் பலர் எந்த நல்ல செயல்களையும் செய்வதில்லை. ஆகையால் பொதுவாக வீட்டில் ஏதேனும் விஷேசம் என்றால் ராகு காலம் எப்போது என்று காலெண்டரை பார்ப்பது வழக்கம். இனி நீங்கள் காலண்டர் பார்க்க தேவை இல்லை. ராகு காலத்தை மிக எளிதாக கண்டறிய ஒரு வழி இருக்கிறது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

ragu

பொதுவாக ராகுகாலமானது தினம்தோனும் ஒன்றரை மணி நேரம் இருக்கும். காலை 7 . 30 மணிக்கு ஆரமித்து மாலை 6 மணிவரை வாரத்தின் ஒவ்வொரு நாளில் ஒன்றரை மணி நேரத்தை இது எடுத்துக்கொள்ளும். கீழே உள்ள அட்டவணையை பார்த்தால் இது நன்கு புரியும்

- Advertisement -

திங்கள் = 7.30 – 9.00
சனி = 09.00 – 10.30
வெள்ளி = 10.30 – 12.00
புதன் = 12.00 – 01.30

வியாழன் = 01.30 – 03.௦௦
செவ்வாய் = 03.00 – 04.30
ஞாயிறு = 04.30 – 06.00

- Advertisement -

இந்த கிழமை வரிசையை மனதில் பதியவைக்க ஒரு பாடல் இருக்கிறது. அதை நாம் நினைவில் வைத்துக்கொண்டால் ராகு காலத்தை எளிதில் கணக்கிடலாம்.

ragu ketu

“திருவிழா சந்தையில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா?” இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு சொல்லின் முதல் எழுதும் ஒவ்வொரு கிழமையின் முதல் எழுத்தோடு ஒத்துப்போகும். உதாரணத்திற்கு திருவிழா என்னும் சொல்லில் வரும் தி என்னும் எழுத்து திங்கட்கிழமையை குறிக்கிறது.

- Advertisement -

rahu-ketu

இப்போது வெள்ளிக்கிழமை அன்று எப்போது ராகுகாலம் என்று இந்த பாடலை வைத்து கணக்கிடுவோம் வாருங்கள்.

திருவிழா  சந்தையில் வெளியில்
வெளியில் = வெள்ளி

இதையும் படிக்கலாமே:
திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க உதவும் மந்திரம்

திருவிழா(திங்கள்) = 7.30 – 9.00, சந்தையில்(சனி) = 09.00 – 10.30,  வெளியில்(வெள்ளி) = 10.30 – 12.00. ஆக வெள்ளிக்கிழமை அன்று ராகு கால நேரம் 10.30 – 12.00

- Advertisement -