திருஷ்டி மற்றும் தீய சக்திகளை விரட்ட உதவும் மந்திரம்

hanuman-1

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். அந்த அளவிற்கு கண் திருஷ்டி கெடுதல்களை தரும் என்று கூறி உள்ளனர் ஆன்றோர்கள். அதே போல ஒரு வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றலே இருக்க வேண்டும். எதிர்மறை ஆற்றலான தீய சக்திகள் இருந்தால் அந்த வீட்டில் உள்ள பலருக்கும் பல விதமான துன்பங்கள் வரும். கண் திருஷ்டி மற்றும் தந்திர எந்திரங்களால் உண்டாகும் அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபட உதவும் ஒரு அற்புத அனுமன் மந்திரம் இதோ.

om manthiram

அனுமன் திருஷ்டி

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
பர யந்திர மந்திர தந்திர த்ராடக நாசகாய |
சர்வஜ்வர சேதகாய சர்வ வியாதி நிக்ருந்தகாய |
சர்வ பய ப்ரசமனாய சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய |
சர்வகார்ய சித்திப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா ||

இதையும் படிக்கலாமே:
சுப யோக வாழ்க்கை தரும் சுக்கிரன் மந்திரம்

இந்த மந்திரத்தை தினமும் 9 முறை ஜெபிப்பதன் மூலம் அனைத்துவிதமான தந்திர சக்திகளிடம் இருந்தும் விடுபடலாம். அதோடு இதனை ஜபிப்பதால் பயம் நீங்கும். நீண்ட நாட்களாக நடைபெறும் வழக்கு சாதகமாக முடியும்.

English Overview:
Here we have Hanuman mantra in Tamil. This is also called as Kan drishti mantra in Tamil. By chanting this mantra, all the negative energies will get away from us with the grace of Lord Hanuman.