அதிகாலையில் வரும் கெட்ட கனவு பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

perumall

அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. அத்தகைய கனவு நல்ல விதமாக இருந்தால் மகிழ்ச்சியே. ஆனால் ஒருவேளை நாம் காணும் கனவு கெட்ட விதமாக இருந்தால் அது நம் மனதை பாதிக்கவே செய்கிறது.

dreams

நாம் காணும் கெட்ட கனவு பலிக்காமல் இருக்க சில எளிய பரிகாரங்கள் உண்டு. அதை நாம் செய்துவிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை. நாம் கண்ட கெட்ட கனவு பற்றி யாரிடமும் கூற கூடாது. காலையில் எழுந்த உடன் குளித்துவிட்டு பசுவின் முன் சென்று புல், பழம், அகத்தி கீரை ஆகியவற்றை பசுவிற்கு கொடுக்க வேண்டும்.


எங்களுடைய வேறு பதிவையும் கிளிக் செய்து படியுங்கள்:
எந்த கிழமையில் எதை செய்தால் வெற்றி நிச்சயம்


அதன் பிறகு நாம் கண்ட கனவு பலிக்க கூடாது என்று அந்த பசுவின் முன் நின்று மனதிற்குள் வேண்டிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு கீழே உள்ள மந்திரத்தை கூறி விஷ்ணுவை வேண்டிக்கொண்டால் கெட்ட கனவால் எந்த பிரச்சனையும் வராது.

“அச்சுதா! கேசவா! விஷ்ணுவே! சத்ய சங்கல்பரே! ஜனார்த்தனா! ஹம்ஸ
நாராயணா! கிருஷ்ணா! என்னை காத்தருள வேண்டும்”