ஈரத்துணியை தலையில் சுற்றிக் கொண்டு இதை செய்தால் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடும்! தவறியும் இந்த தவறை மட்டும் இனி செய்யாதீர்கள்.

lakshmi-wet-towel
- Advertisement -

காலையில் எழுந்தவுடன் பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்து முடித்து விட்டு பூஜை செய்வது லட்சுமி கடாட்சத்தை அள்ள அள்ள குறையாமல் குடும்பத்தை சுபிட்சமாக பார்த்துக் கொள்ளும். ஆனால் குளித்து முடித்து தலையை கூட துவட்டாமல் அப்படியே ஈரத்துடன் வந்து பூஜை செய்வதால் வீட்டில் தரித்திரம் ஏற்படும். ஈரத்துணியை உடுத்திக் கொண்டு செய்யக்கூடாத நிறைய விஷயங்களை நாம் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஈரத்துணி எப்பொழுதும் தரித்திரத்தை வீட்டிற்கு ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன. என்னென்ன வகையில் அவை தரித்திரம் தருகின்றன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

wet-cloth

நம்முடைய தலையில் ஈரம் இருப்பது அல்லது வீட்டில் ஈரத்துணி இருப்பது, அதை நீங்கள் வைத்திருக்கும் இடம் இந்த மூன்றுமே கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இரவு நேரங்களில் ஈரத்துணியை எங்காவது போட்டு வைத்தால் அந்த வீட்டில் கடன் தொல்லைகள் தாண்டவம் ஆடும் என்பது நியதி. அதீத கடன்கள் இருப்பவர்கள் வீட்டில் எல்லாம், இரவு நேரங்களில் துணி துவைப்பது, குப்பையை வெளியில் கொட்டுவது, தண்ணீரை வீணாக்குவது போன்ற செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள். இது கவனித்து பார்த்தால் உங்களுக்கே புரியும்.

- Advertisement -

ஈர தலையை துவட்டி விட்டு காய்ந்த துணியை தலையில் கட்டிக் கொண்டு அதன் பின்பு பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி வழிபடலாம். ஆனால் ஈரத்தோடு சொட்ட சொட்ட பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்றுவது தரித்திரத்தை ஏற்படுத்தும் செயலாகும். இனியும் இந்த தவறை தவறியும் செய்து விடாதீர்கள். இதனால் குடும்பத்தில் தேவை இல்லாத மன கசப்புகள், சங்கடங்கள் உருவாக நேரிடும். வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடினால் லட்சுமி கடாட்சம் குறையும். எனவே இது போன்ற விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

cloth-drying1

மேலும் வீட்டில் ஈரத்துணியை, துவட்டிய துண்டு போன்றவற்றை கதவு மேல் போடுவது, வீட்டிற்குள் கண்ட இடங்களில் போடுவது போன்றவற்றை செய்தாலும் குடும்பத்தில் நிம்மதி இழப்பு ஏற்படும். சதா சண்டை, சச்சரவு என்கிற எதிர்மறை நிகழ்வுகள் நடைபெறும். இதனால் மனதில் நிம்மதியும் இருக்காது. உடம்பில் சோர்வும் ஏற்படும். ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் அமைய சிறு சிறு விஷயங்களில் கூட நாம் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.

- Advertisement -

இரவு தூங்கும் முன்னர் கிச்சன் மேடையை சுத்தம் செய்வது, பாத்திரங்களை கழுவுவது போன்றவற்றை செய்துவிட வேண்டும். அப்படி செய்யும் பொழுது துடைக்க பயன்படுத்தும் துணி ஆனது அப்படியே வைத்துவிட்டு சிலர் செல்வார்கள். இது போல் சென்றால் நிச்சயம் அந்த வீட்டில் தரித்திரம் தாண்டவமாடும், அது உறுதி. செல்வ நிலையானது வேகமாக குறையும். பதவி இழப்பு, வருமானம் குறைவு, வேலை இன்மை ஆகிய பிரச்சினைகள் தலைதூக்க துவங்கும். அவற்றை நன்கு பிழிந்து காய வைத்து விட்டு பின்னர் தூங்கச் செல்வது நல்லது.

cloth-drying

அதே போல மாலை அந்தி சாய்ந்த பிறகு துணி துவைப்பது என்பது கூடாது. அப்படி வேறு வழியே இல்லாமல் துணித் துவைப்பவர்கள் அதை வீட்டிற்குள் காய போடுவது என்பதும் தவறு. முடிந்தவரை மாலையில் துணி துவைப்பது உத்தமம். முடியாத பட்சத்தில் துணிகளை துவைத்து வெளியில் காய போடுங்கள். மழை வந்தாலும் பரவாயில்லை, மறுநாள் அடிக்கும் வெயிலில் அது காய்ந்து விடும். ஆனால் வீட்டிற்குள் போடுவதால் எதிர்மறை ஆற்றல்கள் பெருகும். பகல் நேரங்களில் வீட்டிற்குள் துணி காயப் போடலாம், ஆனால் இரவு நேரங்களில் வீட்டிற்குள் துணி காய போடுவது தரித்திரத்தை ஏற்படுத்தும். ஆகவே இது போன்ற செயல்களை ஈரத்துணியை வைத்து இனியும் தவறியும் செய்து விடாதீர்கள்.

- Advertisement -