What about you meaning in Tamil | வாட் அபௌட் யு மீனிங் இன் தமிழ்

what about you meaning in Tamil
- Advertisement -

What about u Tamil meaning | வாட் அபௌட் யு தமிழ் மீனிங்

உலகெங்கிலும் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டாலும் ஆங்கிலம் என்பது தான் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளை பேசுவோர்களின் தொடர்பு மொழியாக இருக்கிறது. தமிழ் நாட்டை பொறுத்தவரையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளுக்கும் பள்ளிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து கற்பிக்கப்படுகிறது. எனினும் சிலரால் ஆங்கிலத்தில் சரளமாக பேசவோ எழுதவோ முடியவதில்லை. அதே போல சிலருக்கு தமிழும் தடுமாற்றம் தான். அந்த வகையில் இந்த பதிவில் நாம் What about you meaning in Tamil குறித்து பார்ப்போம்.

what about you meaning in Tamil

What about you meaning in Tamil – தமிழ் அர்த்தம்:

Meaning of what about you in Tamil: what about you என்ற வாக்கியத்திற்கு நேரடியாக இது தான் பொருள் என்று கூறமுடியாது. மாறாக நேரத்திற்கு, இடத்திற்கு, நம்பருக்கு ஏற்ப இதன் பொருள் மாறுபடும். அந்த வகையில் What about you என்ற வாக்கியத்தை எங்கு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இப்போது விரிவாக பார்ப்போம். அதற்கான சில உதாரணங்கள் இதோ

- Advertisement -
  • நீ என்ன நினைக்கிறாய்?
  • நீ என்ன சொல்கிறாய்?
  • நீயும் வருகிறாயா?
  • நீ நலமாக உள்ளாயா?
  • உன்னுடைய கருத்து என்ன?

பொருள் / விளக்கம்:
பொதுவாகவே ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூடி இருக்கும் இடத்தில் மேலே கூறப்பட்டுள்ள வாக்கியங்கள் தமிழில் அதிகம் பயன்படுத்தப்படும். அதே போல் தான் ஆங்கிலத்திலும். உதாரணமாக, மூன்று நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் நாளை படத்திற்கு போகிறேன் என்று ஒருவர் கூற, இன்னொருவர் நான் நாளை ஊருக்கு போகிறேன் என்று கூற, மூன்றாவது நபர் மட்டும் அமைதியாக இருக்கிறார் என்றால் அந்த சமயத்தில் வாட் அபௌட் யு (What about you) என்று அவரிடம் கேட்கலாம். நாளை உன்னுடைய பிளான் என்ன என்று கேட்கப்பதற்கு பதிலாக இங்கு இப்படி கேட்கலாம்.

meaning of what about you in Tamil

அதே போல ஒரு அலுவலகத்தில் மீட்டிங் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அங்கு பலரும் பல கருத்துக்களை கூறும் வேலையில் ஒருவர் மட்டும் அமைதி காக்க, அவரிடம் மற்றவர்கள் வாட் அபௌட் யு (What about you) என்று கேட்கலாம். அதாவது உன்னுடைய கருத்து என்ன? என்று கேட்கும் விதமாக வாட் அபௌட் யு என்ற சொற்றொடர் இங்கு பயன்படுகிறது.

அதே போல ஒரு மருத்துவ மனையில் ஐந்து நோயாளிகள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்களில் ஒவ்வொருவரிடமும் மருத்துவர் நலன் விசாரித்து வருகையில் யாரிடம் வேண்டுமானாலும் வாட் அபௌட் யு என்று கேட்கலாம். உன்னுடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதே இங்கே அதன் பொருள்.

- Advertisement -