வீட்டில் எந்த வகையான விளக்கில் தீபம் ஏற்றினால் என்ன பலன் தெரியுமா?

vilakku

வீட்டில் விளக்கேற்றுவது என்பது ஏதோ சம்பிரதாயத்திற்காக நாம் செய்யும் ஒரு விடயமல்ல. விளக்கேற்றுவதற்கு பின் ஆன்மீக ரீதியாக பல அற்புதமான விடயங்கள் அடங்கி உள்ளது. அதேபோல் விளக்கில் பல விதம் இருந்தாலும், ஒவ்வொரு விதமான விளக்கை ஏறுவதால் நாம் ஒவ்வொரு விதமான பலனை அடைய முடியும். வாருங்கள் எந்த விளக்கில் தீபம் ஏற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம்.

vilaku

மண்ணால் செய்யப்பட்ட விளக்கு:

இந்த வகை விளக்கை ஏற்றுவதால். வீட்டில் உள்ள பீடை விலகி சந்தோஷம் பெருகும்.

வெள்ளி விளக்கு:

வெள்ளி விளக்கை கொண்டு வீட்டில் தீபம் ஏற்றுவதால் திருமகளின் பரிபூரண அருள் கிடைக்கும். இதனால் வீட்டில் செல்வம் சேரும்.

- Advertisement -

velli vilaku

பஞ்ச லோக விளக்கு:
இந்த வகை விளக்கால் தீபம் ஏற்றுவதால் துர்சக்திகள் விலகி வீட்டில்  தேவதை வசியம் உண்டாகும்.

வெண்கல விளக்கு:
வெண்கல விளக்கை கொண்டு தீபம் ஏற்றுவதால் நோய்கள் விலகி ஆரோக்கியம் கூடும்.

venkala vilaku

இரும்பு விளக்கு:
இரும்பு விளக்கால் தீபம் ஏற்றுவதால் சனி பகவானால் உண்டான தோஷங்கள் விலகும்.