பிரச்சனைகள் அனைத்தும் தீர என்ன வழி ? ஒரு குட்டி கதை

man
- Advertisement -

கிராமத்தில் வசித்த பால்காரர் ஒருவர் தான் வளர்க்கும் பசு ஒன்றை இழுத்துக்கொண்டு ரோட்டில் செல்கிறார். அப்போது திடீரென அந்த பசு ரோட்டில் அமர்ந்துவிடுகிறது. கிராமத்தின் சாலை மிகவும் சிறியது என்பதால் பசு அமர்ந்தபிறகு அதில் வெறும் மிதிவண்டியும் பைக்கும் மட்டுமே செல்ல இடம் இருந்தது. என்னடா இது நேரம் காலம் தெரியாமல் நம் பசு இப்படி இங்கு நடு ரோடில் அமர்ந்துகொண்டதே என்றெண்ணிய அந்த பால்காரர் அதை எழுப்ப எவ்வளவோ முயற்சிக்கிறார் ஆனால் அவரால் பசுவை எழுப்ப முடியவில்லை.

cow

அந்த வழியே வந்த காவல்துறையை சேர்ந்த கான்ஸ்டேபிள் ஒருவர் இதை காண்கிறார். மாட்டோடு இங்கு என்ன கொஞ்சிக்கொண்டிருக்கிறாய் நகரு நான் அதை எழுப்புகிறேன் என்று பால்காரரை அதட்டிவிட்டு அவர் மாட்டை எழுப்ப முயற்சிக்கிறார். ஆனால் அவரால் அதை அசைக்க கூட முடியவில்லை. பின் இருவரும் சேர்ந்து மாட்டை இழுக்கின்றனர் ஆனால் எதுவும் நடக்கவில்லை.

- Advertisement -

அந்த வழியாக ஒரு பயில்வான் வருகிறார். இவர்கள் இருவர் செய்யும் செயலை பார்த்து சிரித்தபடியே, என்ன இது நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு மாட்டைகூடவா இழுத்து எழுப்ப முடியவில்லை, நகருங்கள் என்று கூறிவிட்டு அவர் தன்னந் தனியாக மாட்டை இழுக்கிறார் ஆனால் அவருக்கு அவமானம் தான் மிஞ்சியது. பிறகு மூவரும் சேர்ந்து இழுக்கிறார்கள் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

bodybuilder

இதை எல்லாம் கண்டு நகைத்தபடியே ஒரு பள்ளி சிறுவன் அங்கு வருகிறான். அவர்கள் செய்வதை சிறிது நேரம் நின்று வேடிக்கை பார்த்து சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்கிறான். சிறிது தூரம் சென்று அங்கு கிடந்த புல்லை எல்லாம் அறுத்து அதை ஒரு கத்தையாக கட்டி பிறகு அதை மாட்டருகே கொண்டு வருகிறான். புல்லை பார்த்தவுடன் அந்த மாடு அதை சாப்பிடுவதற்காக எழுகிறது. சிறுவனோ, புல்லை மாட்டின் வாயருகே காண்பித்தபடி நடக்கிறான் மாடும் அவனோடு சேர்ந்து நடக்கிறகு.

- Advertisement -

boy

இதையும் படிக்கலாமே:
நீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்க வில்லையா ? இந்த கதையை படியுங்கள்

எந்த பிரச்சனை வந்தாலும் அதை தம் பலம் கொண்டு சீர் செய்துவிட முடியும் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் பலத்தை கொண்டு அனைத்தையும் சீர் செய்துவிட முடியாது. எந்த பிரச்சனைக்கும் மிக எளிமையான ஒரு தீர்வு நிச்சயம் உண்டு. அந்த தீர்வை கண்டறிவதே புத்திசாலித்தனம்.

குட்டி கதைகள், சிறு கதைகள் என அனைத்துவிதமான தமிழ் கதைகளையும் படிக்க தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்யுங்கள்.

- Advertisement -