ஒவ்வொருவரின் ஆசையும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான். இந்த மகிழ்ச்சியை தரக்கூடிய அனைத்து விதமான பொருட்களும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் பணவரவு என்பது அதிகரிக்க வேண்டும். பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்குரிய முயற்சிகளையும் உழைப்பையும் நாம் செய்ய வேண்டும்.
இப்படி முயற்சிகளையும் உழைப்பையும் செய்வதன் மூலம் மட்டும் அல்லாமல் தெய்வத்தின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைத்தால்தான் நம்மால் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ முடியும். அப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த பொருளை வாங்கி வர வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குரு அருள் பெற
மகிழ்ச்சிகரமான, வளமான, மங்களகரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் அதே சமயம் எந்தவித தடைகளும் ஏற்படாமல் இருப்பதற்கும் கண்டிப்பான முறையில் நவகிரகங்களின் அருளாசி என்பது வேண்டும். நவகிரகங்களின் அருள் ஆசியோடு தெய்வங்களின் அருளும் இருந்தால்தான் ஒருவரால் வளமான வாழ்க்கையை வாழ முடியும்.
அப்படி வளமான வாழ்க்கை வாழ்வதற்கு முக்கியமாக நமக்கு தேவைப்படக்கூடிய ஒரு கிரகத்தின் அருள் என்றால் அது குரு பகவான் தான். குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். குருவின் பார்வை நன்மையாக இருக்கும் பட்சத்தில் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும்.
ஒருவருக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்றாலோ, படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றாலோ, நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றாலோ, குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றாலோ அவருக்கு குருவின் பார்வை என்பது சாதகமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவருடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
அப்படிப்பட்ட குரு பகவானுக்குரிய பொருளாக கருதப்படுவது தான் மஞ்சள். இந்த மஞ்சளை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏதாவது ஒரு ரூபத்தில் பயன்படுத்திக் கொண்டே வந்தால் குருபகவானின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. விரலி மஞ்சளோ, குண்டு மஞ்சளோ, கஸ்தூரி மஞ்சளோ அல்லது மஞ்சள் தூளோ இவற்றை நாம் வாங்கி வந்து வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மஞ்சள் எந்தளவிற்கு வீட்டில் இருக்கிறதோ அந்த அளவிற்கு மங்களங்கள் நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் மஞ்சளை தினமும் நம்முடைய நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் குரு பகவானின் அருளை நம்மால் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட மஞ்சளை திங்கட்கிழமை அன்று எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாம் வாங்கி வந்து வீட்டில் வைப்பதன் மூலம் நமக்கு வளமான வாழ்க்கை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மஞ்சள் தூளாக இருந்தாலும் சரி முகத்திற்கு தேய்த்து குளிக்கும் மஞ்சள் தூளாக இருந்தாலும் சரி அதை நாம் திங்கட்கிழமை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வாங்கி வரலாம். இப்படி தொடர்ந்து திங்கட்கிழமை தோறும் நாம் மஞ்சளை வாங்கி வந்து வீட்டில் வைக்க குரு பகவானின் அருளானது பரிபூரணமாக ஏற்பட்டு வளமான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: தனவசிய மந்திரம்
குருபகவானின் பகவானின் அருளை பரிபூரணமாக பெற்று வளமான வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள் நம்பிக்கையுடன் இதைச் செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளுவோம்.