போகி அன்று உண்மையில் எதை செய்தால் நன்மை பிறக்கும் தெரியுமா ?

boghi4

பொங்கலின் துவக்கமாக நாம் போகி பண்டிகையை கொண்டாடுகிறோம். போகி என்றாலே “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற தத்துவத்தை நம் முன்னோர்கள் விதைத்து சென்றுள்ளனர். வெறும் பழைய பொருட்களை மட்டும் எரிக்காமல் மன ரீதியாக வேறு சிலதையும் போகியன்று எரிப்பதே சிறந்தது.

bhogi

பழங்காலத்தில் போகியன்று விடியற்காலையில் எழுந்து பழைய பாய், வேறு சில உபயோகமற்ற பொருட்கள், உடைந்த பானைகள் போன்றவற்றை வீட்டருகில் தீயிட்டுக் கொளுத்துவது வழக்கம். மேலும் பொங்கல் அன்று புதுப்பானை, புத்தரிசி என பல புதியவைகளோடு தை மாதத்தை பொங்கலிட்டு வரவேற்பது வழக்கம். மன ரீதியாக பார்த்தல் போகிக்குள் வேறு சில தத்துவங்களும் ஒளிந்துள்ளன.

நம்முடைய மனதில் எக்கச்சக்கமான கவலைகளையும், வெறுப்பு, பொறாமை என பல தீய எண்ணங்களையும் வைத்துக்கொண்டு வாழ்கிறோம். இவை அனைத்தையும் நம்முடைய மனதில் இருந்து எரித்துவிட்டு பொங்கல் முதல் புதிய மனிதனாக வாழவேண்டும் என்ற அற்புத தத்துவத்தையும் போகி உணர்த்துகிறது.

Bhogi

பாழ்பட்ட பொருட்களையும் பாழான மனதையும் போக்கி விட்டு புது மனிதனாய் புத்துணர்வோடு வாழ துவங்குவதே போகி பண்டிகையை கொண்டாடுவதன் நோக்கம். இதனாலேயே இதற்கு ‘போக்கி’ என்ற பெயர்வந்தது. நாளடைவில் அந்த பெயரே மருவி போகி என்றானது.

pogi

இதையும் படிக்கலாமே:
மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேரின் பெயர்கள் தெரியுமா ?

நாகரிக வளர்ச்சியால் இன்று பலர் போகியை கொண்டாடுவது கிடையாது. கொண்டாடுபவர்களில் சிலர் சுற்று சூழலை மாசு படுத்தும் சில பொருட்களை எரிக்கவே செய்கின்றனர். இந்த காலகட்டத்தை பொறுத்தவரை போகி அன்று பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதற்கு பதிலாக வீட்டுக்கொரு மரம் நட்டாலே போதும் பழைய மாசு காற்று குறைந்து அற்புதமான தென்றல் வீச துவங்கும்.