காசிக்கு செல்பவர்கள் நிச்சயம் இதை விட்டுவிட்டு வர வேண்டும்

gangai
- Advertisement -

இந்து மதத்தை பொறுத்தவரை வயதான பிறகு நிச்சயம் காசிக்கு செல்லவேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. காசியில் இந்துக்களின் புனித நீரான கங்கை ஓடுவதால் கங்கையில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் பலருக்கும் உண்டு. வயதான பின் காசிக்கு செல்ல என்ன காரணம் ? அங்கு உண்மையில் எதை விட்டுவிட்டு வர வேண்டும் ? வாருங்கள் பார்ப்போம்.

river ganga

எவர் ஒருவர் கங்கா ஸ்நானம் செய்தாலும் அவரின் பாவங்கள் அனைத்தும் அவரிடம் இருந்து விலகி செல்லும் என்பது நம்பிக்கை. ஆகையால் கங்கையில் குளித்த பிறகு ஆசா பாசங்களை துறந்து இறைவனே கதி என்று வாழ்வதே சிறந்தது. அப்படி வாழ்ந்தால் மட்டுமே நாம் பாவங்களை மீண்டும் செய்யாமல் இருப்போம். இதனாலேயே பலர் வயதான பின்பு காசிக்கு செல்கின்றனர்.

- Advertisement -

காசியில் கங்கா ஸ்நானம் செய்யும் பலர், எனக்கு பிடித்த பொருள் ஒன்றை நான் கங்கையில் விட்டுவிட்டேன் ஆகையால் இனி எனக்கு அதன் மீது பற்று இருக்காது என்று கூறுவர். ஆனால் உண்மை யாதெனில், கங்கா ஸ்நானம் செய்கையில் நமது ஆசை, செருக்கு, பொறாமை போன்ற தீய குணங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வரவேண்டும். இதை தவறாக புரிந்துகொண்டு பலர் கங்கையில் எதையாவது விட்டுவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

river ganga

இனியாவது நம் முன்னோர்களின் கூற்றை சரியாக புரிந்துகொண்டு புனிதநதியான கங்கை நதியை அசுத்தம் செய்யாமல் காப்போம்.

- Advertisement -

இதையும் பார்க்கலாமே:
தஞ்சை பெரியகோவில் பிரமாண்ட நந்திக்கு நடந்த அபிஷேகம் – வீடியோ

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் App – ஐ டவுன்லோட் செய்யுங்கள்.

- Advertisement -