தலைவிதியை தீர்மானிக்கும் ரேகைகள்: உங்களை பற்றி கூறுவதென்ன?

ஒருவரது கைரேகையை வைத்து அவரது ஜாதகத்தையே கூற முடியும் என்கிறார்கள் கைரேகை பார்த்து பலன் சொல்லும் ஜோதிடர்கள். அந்த வகையில் நம் கையில் உள்ள சில ரேகைகள்  எதை குறிக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

யூனியன் வரிகள்

சுண்டு விரலுக்கு கீழே, சிறிய கோடுபோல் இருப்பது தான் யூனியன் வரிகள். இது நெருங்கிய உறவுகள் மற்றும் காதல் வாழ்க்கயை பற்றி குறிக்கிறது.

வீனஸ் வளையம்

- Advertisement -

சிறுவிரல் மற்றும் மோதிர விரலுக்கு நடுவில் ஆரமித்து, அரை நிலவு போல் வளைந்து நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு நடுவில் முடியும் இந்த ரேகைக்கு பெயர் தான் வீனஸ் வளையம். இது உணர்வு ரீதியான திறன் மற்றும் நேர்மைக் குணத்தைக் குறிக்கிறது.

சூரிய வரி

சூரிய வரி என்பது மோதிர விரலுக்கு கீழ் வரி கோடுகள் போல் இருக்கும். இது ஒருவரது புகழ் மற்றும் இகழ்ச்சியை குறிக்கிறது.

பயண வரி

மணிக்கட்டு மற்றும் இதய ரேகை நடுவில் உள்ளங்கை அடி பாகத்தில் மட்டமான கோடுகளாக அமைந்திருக்கும். இங்கு உள்ள ஒவ்வொரு வரியும் ஒருவருடைய பயணங்கள் மற்றும் அதன் நீட்சியை குறிக்கிறது.

அப்போலோ வரி

மணிக்கட்டு அருகே உள்ள மேட்டில் இருந்து தொடரும் கொடு போன்ற ரேகை தான் அப்போலோ வரி. இது ஒருவரது வாழ்வில் உள்ள அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது.

மெர்குரி வரி

மணிக்கட்டு அருகே உள்ளங்கை பகுதியில் துவங்கி சிறுவிரல் நோக்கி தொடரும் ரேகை தான் மெர்குரி வரி. இது ஒருவரது தொழில், ஆரோக்கியம், பேச்சு திறன் மற்றும் அறிவு கூர்மை ஆகியவற்றைக் குறிக்கிறது

தினசரி நல்ல நேரம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்.