Whatsapp : வாட்ஸ்அப் மூலம் வரும் செய்திகள் உண்மையா என்று கண்டறிய இதனை செய்யுங்கள்

watsapp
- Advertisement -

வாட்ஸ்அப் செயலி மூலம் எளிதாக ஒரு செய்தியை அனைவருக்கு பரப்ப முடியும். இந்த வாட்ஸ்அப் செயலி தற்போது மக்களிடம் உபயோகிக்கும் வாடிக்கை ஆகிவிட்டது. அதனால் அதிக அளவு செய்திகளை மக்கள் உடனுக்குடன் மெசேஜ் மூலம் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டமான இந்த சூழலில் அதிக அளவு பொய்யான செய்திகள் பரவ வாட்ஸ்அப் ஒரு காரணியாக விளங்குகிறது. இதனை போக்க கீழ்வரும் வழிமுறைகளை பயன்படுத்தினால் எளிமையாக பொய்யான செய்திகளை கண்டறியலாம்.

watsap

பொய்யான தகவல் என்றால் அனுப்பியவரிடம் கேள்வி கேளுங்கள். அதற்கு பதிலளிக்க திணறினால் அது பொய்யான செய்தி என்று தெரியவரும் மேலும், அடுத்தமுறை இதுபோன்ற செய்திகளை அவர் அனுப்ப மாட்டார். அடுத்து, யாடரிடம் இருந்து பார்வேர்டு ஆகி இருக்கிறது என்று கவனியுங்கள். உங்களுக்கு தெரியாத நபர் செய்திகளை அனுப்பியிருந்தால் அதனை ஷேர் செய்ய வேண்டாம்.

- Advertisement -

அடுத்து பொய்யாக வரும் செய்திகளில் ஏகப்பட்ட வார்த்தை பிழைகள் மற்றும் எழுத்து பிழைகள் என அதிகம் இருக்கும். மேலும், அதில் பதிவிடப்பட்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை இணையத்தில் பதிவிட்டு சரிபாருங்கள். நீங்கள் அவ்வாறு சோதித்தால் அது தற்போதைய நிகழ்வா அல்லது ஏற்கனவே இருக்கும் ஒரு பதிவினை எடுத்து திருப்ப வீணாக அனுப்புகிறார்களா என்று தெரியும்.

Wa

மேலும், அவ்வாறு போலியானது என்று நீங்கள் யூகித்தால் அந்த லிங்கினை எடுத்து இணையத்தில் சரிபார்க்கலாம். மேலும், அந்த பக்கத்தின் சோர்ஸ் பதிவினையும் பார்த்து அந்த செய்தி போலியானதா என்று கண்டறியலாம். போலியான பதிவுகளை வாட்ஸ்அப் மூலம் பரப்புவதால் அது எளிதாக பரவி அந்த போலியான செய்தி வைரலாகிறது. எனவே, இதுபோன்ற போலியான தகவல்களை வாட்ஸ்அப் மூலம் பகிரவதை தவிக்கலாம் நண்பர்களே.

- Advertisement -