கோதுமை மாவுல ஆப்பம் சுட்டு இருக்கீங்களா? ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. நல்லா ஓரத்துல மொறு மொறுன்னு உள்ள பஞ்சு போல சாஃப்டா வர இதை சேர்க்க மறக்காதீங்க.

- Advertisement -

இந்த கோதுமை மாவுல இது வரைக்கும் பூரி சப்பாத்தி தோசை அடை மற்ற ஸ்நாக்ஸ் வகைகள் என விதவிதமாக சமைத்திருப்போம். ஆனால் பெரும்பாலும் யாரும் ஆப்பம் சுட முயற்சி செய்து இருக்க மாட்டார்கள். ஏனென்றால் கோதுமை மாவு வழுவழுப்பாக இருக்கும். இதில் ஆப்பம் ஊற்றினால் அந்த அளவிற்கு சரியாக வராது. இந்த சமையல் குறிப்பு பதிவில் கோதுமை மாவிலும் அருமையான ஆப்பம் சுடுவது எப்படி என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த ஆப்பம் சுடுவதற்கு முதலில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஒரு முறை அலசிய பிறகு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு கப் கோதுமை மாவு அரை கப் மீந்த சாதம் இது பச்சரிசி புழுங்கல் அரிசி என எந்த சாதமாக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் அரை கப் குருவிய தேங்காய் அதன் பின் புறம் இருக்கும் கருப்பு பகுதியை நீக்கி விட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இதில் ஏற்கனவே ஊற வைத்த உளுந்து, வெந்தயம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த மாவை கொஞ்சம் கொரகொரப்பு தன்மையுடன் அரைத்த பிறகு இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு பச்சரிசி மாவு இடியாப்ப மாவு என எதை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த மாவை சேர்க்கும் பொழுது தான் ஆப்பம் கோதுமை மாவில் வழுவழுப்புத் தன்மை இல்லாமல் ஓரங்களில் மொறு மொறுவென்று வரும். இதை சேர்த்த பிறகு மீண்டும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அரைத்த இந்த மாவை ஒரு பவுலில் சேர்த்த பிறகு ஒரு ஸ்பூன் உப்பையும் சேர்த்து மாவை நன்றாக கலந்து எட்டு மணி நேரம் வரை அப்படியே ஊற வைத்து விடுங்கள். இந்த மாவை நாம் சாதாரணமாக அரைக்கும் ஆப்ப மாவு போல பொங்கி வராது. ஆனால் மாவு ஆப்பத்திற்கு ஏற்றார் போல் புளித்து இருக்கும். அதே போல் இந்த மாவை நாம் தோசை மாவின் பதத்தை விட கொஞ்சம் கெட்டியாக இருக்கும்படி கரைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் ஆப்பம் ஊற்ற சரியாக இருக்கும்.

இதையும் படிக்காலமே: ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொள்ளை ஒரு முறை இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்கள்.

இப்போது அடுப்பில் ஆப்ப கடாய் வைத்து சூடான பிறகு மாவை எடுத்து ஊற்றி நன்றாக சுழற்றி வைத்து மூடி போட்டு விடுங்கள். ஐந்து நிமிடத்திற்கு எல்லாம் ஆப்பம் நன்றாக வெந்து ஓரங்களில் சிவந்து பார்க்கவே அழகாக இருக்கும். இதை சாப்பிடவும் அட்டகாசமாகவே இருக்கும். இதற்கு நீங்கள் குருமா, தேங்காய் பால் என எந்த வகையான சைடு டிஷ்சையும் வைத்து சாப்பிடலாம். நீங்களும் ஒரு முறை இந்த கோதுமை மாவு ஆப்பத்தை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -