கொள்ளை அழகைக் கொட்டி தரும் கோதுமை மாவு. கோதுமை மாவோடு மட்டும் இந்த பொருளை சேர்த்து முகத்தில் போட்டு பாருங்க. செம்ம அழகா மாறிடுவீங்க.

face11
- Advertisement -

சமையலறையில் இருக்கும் கோதுமை மாவை பயன்படுத்தி கொள்ளை அழகை பெற முடியும் என்றால் யாருக்குத்தான் ஆசை வராது. செலவே இல்லாமல் சருமத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சருமத்தில் இருக்கும் கருமை நிறம் நீங்கி, சருமம் பொலிவு பெற இந்த குறிப்பு ஒன்றே உங்களுக்கு போதும். கொஞ்சம் சிரமப்படாமல் பின் சொல்லக்கூடிய குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் தான் பின்பு பேரழகி. ஆண்களும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம்.

கூடுமானவரை கோதுமையை வாங்கி அரைத்த மாவாக இருந்தால் ரிசல்ட் இரட்டிப்பு பலன் கொடுக்கும். முடியாது என்பவர்கள் ஆட்டா மாவையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். கோதுமை மாவோடு நாம் சேர்க்கப் போகும் பொருள் ஆலோவேரா ஜெல். கற்றாழையை வெட்டி அதன் மேலே இருக்கக்கூடிய மஞ்சள் நிறத்தை நீக்கிவிடுங்கள். கற்றாழையை வெட்டும் பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஒரு பால் வெளியாகும். அதோடு முகத்தில் போடக்கூடாது. கற்றாழையை நன்றாக கழுவி விட்டு அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் கற்றாழை ஜெல், சர்க்கரை இந்த இரண்டு பொருட்களையும் போட்டு நன்றாக அடித்து கலங்கினால் ஒரு ஸ்க்ரப்பர் தயாராக கிடைக்கும். அந்த ஸ்க்ரப்பரை முகத்தில் ஜென்டில் ஆக போட்டு ஸ்க்ரப் செய்து 5 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். மீண்டும் இன்னொரு கிண்ணத்தில், 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, இந்த கோதுமை மாவை பேக்காக கலப்பதற்கு தேவையான அலோவேரா ஜெல்லை போட்டு பேஸ்ட் போல தயாரித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும் கலக்குவதற்கு.

தேவைப்பட்டால் இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி ஒரு கிரீம் போல தயார் செய்து கொள்ளலாம். இதை உங்களுடைய முகம் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்து, அப்படியே பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் விட்டு விட வேண்டும். பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை உங்களுடைய முகத்தில் போட்டு வந்தால் கூட முகம் வெள்ளையாக பொலிவாக மாறத் தொடங்கிவிடும். முகத்தில் இருக்கும் தேவையற்ற கரும்புள்ளிகள் முகப்பருக்கள் படிப்படியாக குறையும்.

- Advertisement -

நிறைய பேருக்கு இந்த கற்றாழை ஜெல் இயற்கையாக கிடைப்பதில் சிரமம் இருக்கும். அவர்கள் கடையிலிருந்து கற்றாழை ஜெல்லை வாங்கி பயன்படுத்துங்கள். ஆனால் கலர் சேர்க்காத வாசனை திரவியம் சேர்க்காத கற்றாழை செல்லாத இருக்கட்டும். உங்களுக்கு முகத்தில் முகப்பரு இருந்தால் சர்க்கரை போட்டு கற்றாழை ஜெல்லை முகத்தில் அழுத்தம் கொடுத்த ஸ்கிரப் செய்ய வேண்டாம். அதனை ஸ்கிப் செய்து கொள்ளுங்கள்.

கோதுமை மாவை கற்றாழை ஜெல்லோடு சேர்த்து முகத்தில் போட்டாலும் முகப்பரு உள்ளவர்கள் மசாஜ் செய்ய வேண்டாம். லேசாக அந்த பேக்கை முகத்தில் போட்டு வர, முகப்பரு படிப்படியாக குறையட்டும். அதன் பின்பு மசாஜ் செய்ய கூடிய வழக்கத்திற்கு வருவோம். அவ்வளவு தாங்க. உங்களுடைய அழகு மேலும் அழகாக செலவே இல்லாத இந்த குறிப்பை ட்ரை பண்ணி பாருங்க. எல்லா சருமத்திற்கும் இது ஒத்துப் போகக் கூடிய குறிப்பு தான்.

- Advertisement -