கோதுமை மாவு அழகு குறிப்பு

wheat flour
- Advertisement -

முகத்தை அழகாக பராமரிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்திருப்போம். அவற்றால் பலன்களும் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக நாம் சிறப்பாக ஏதாவது பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆனால் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் வீட்டில் இருக்கக்கூடிய ஒரே ஒரு மாவை வைத்து எப்படி நம் முகத்தை அழகுபடுத்த முடியும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

நாம் உண்ணும் உணவை முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது அதனால் நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது நம் அனைவருக்கும் தெரியும். நம்முடைய உடல் எந்த உணவை ஏற்கிறதோ அந்த உணவை தான் நம்முடைய தோலும் ஏற்றுக்கொள்ளும் என்று சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால் தான் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள் இதை வைத்து முகத்தை அழகுப்படுத்த முயற்சி செய்கிறோம்.

- Advertisement -

அந்த வகையில் நம் அனைவரின் வீட்டில் இருக்கக்கூடிய கோதுமை மாவை வைத்து முகத்தை எந்த அளவுக்கு அழகு செய்யலாம் என்று பார்ப்போம். கோதுமை மாவில் பல உயிர்சத்துக்கள் இருக்கின்றன. இது முகத்தில் இருக்கக்கூடிய கருமையை நீக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கும் பொருட்களால் நம் முகம் மிகவும் பிரகாசமாகவும், அழகாகவும் தெரியும்.

முதலில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு காய்ச்சாத பசும்பாலை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே விட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி முகத்தில் தேவையற்ற சுரக்கும் எண்ணெய் பசை குறைய ஆரம்பிக்கும். இதனால் முகப்பருக்கள் ஏற்படும் சூழல் குறையும்.

- Advertisement -

இரண்டாவதாக ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பன்னீரை ஊற்றி கலந்து முகத்தில் தடவ வேண்டும். இவ்வாறு பன்னீரை உபயோகப்படுத்துவதன் மூலம் நமக்கு முகத்தில் ஒருவித புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீங்கி முகத்தில் ஒருவித பிரகாசம் ஏற்படும்.

மூன்றாவது ஆக இரண்டு ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன் மற்றும் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவ வேண்டும். இப்படி தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருந்திட்டுகள் அனைத்தும் நீங்கும். மேலும் வறண்டு போய் இருக்கும் முகத்தையும் ஈரப்பதத்துடன் வைத்து ஒருவித பொலிவை கொடுக்கும். இயற்கையாகவே முகத்திற்கு ஒருவித ஜொலிப்பை தருவதற்கு இந்த ஃபேஸ் பேக் உபயோகப்படும்.

இதையும் படிக்கலாமே: எந்த வயது நரையையும் கருப்பாக்கும் ஹேர் டை.

ஒரே ஒரு கோதுமை மாவை வைத்து நம் முகத்தின் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் நம்மால் நீக்க முடியும் என்னும் பொழுது அதை முயற்சி செய்துதான் பார்க்கலாமே.

- Advertisement -