எந்த வயது நரையையும் கருப்பாக்கும் ஹேர் டை.

hairdye
- Advertisement -

ஒருவரை பார்த்தவுடன் அவருக்கு வயதாகி விட்டது என்பதை கண்டறிவதற்கு உதவக் கூடியது தான் நரை முடி. ஆனால் இன்றைய காலத்தில் இளைய வயதிலேயே பலருக்கும் நரைமுடி ஏற்படுகிறது. இதை சரி செய்வதற்கு பல வழிகளை மேற்கொண்டாலும் அவற்றால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூற இயலாது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் இயற்கையாகவே தயாரிக்க கூடிய ஹேர் டையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

கடைகளில் விற்கப்படும் டையை பயன்படுத்துவதால் பல ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படுகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரியும். டையில் கெமிக்கல்கள் கலந்திருப்பதால் கண் பார்வை மங்குதல் முடி உதிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கு. இன்னும் சிலருக்கோ முகத்தில் மங்கு போன்று கருப்பாக தோன்ற ஆரம்பிக்கும். இப்படி பல பக்க விளைவுகளை கொண்டிருக்கும் டையை நாம் பயன்படுத்தாமல் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து டை தயார் செய்து தடவுவதன் மூலம் நரைமுடியை கருப்பாகவும் அதே சமயம் முடியை ஆரோக்கியமாகவும் வளரச் செய்ய முடியும்.

- Advertisement -

ஒரு இரும்பு கடாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு மருதாணி பொடியை போட வேண்டும். பிறகு அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நெல்லிக்காய் பொடி, இரண்டு ஸ்பூன் அளவிற்கு கடுக்காய் பொடியை சேர்த்து நன்றாக அடுப்பில் வைத்து கருகும் அளவிற்கு வறுத்து எடுக்க வேண்டும். அதே சமயம் இன்னொரு அடுப்பில் இந்த பொடியை கலக்குவதற்காக டிகாஷன் தயார் செய்ய வேண்டும்.

இந்த டிகாஷன் செய்வதற்கு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு டீ தூளை சேர்க்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு காபி தூளை சேர்த்து ஒரு ஸ்பூன் அளவிற்கு வேம்பாலம் பட்டையையும் அதில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து டிகாஷன் இறங்கியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி விட்டு மறுபடியும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இரண்டாவது முறையாகவும் டிகாஷனை எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த டிகாஷனை ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து நாம் பதப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் பொழுது உபயோகப்படுத்தலாம். இப்பொழுது நாம் வறுத்து வைத்திருக்கும் பொடியில் இந்த டிகாஷனை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். 12 மணி நேரம் அப்படியே இரும்பு கடாயில் இருக்கட்டும். மறுநாள் காலையில் எழுந்து இந்த டையை தலையின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தடவி அரைமணி நேரம் ஊற வைத்து பிறகு எப்போதும் போல் தலைக்கு குளித்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இந்த தண்ணீரை தலையில் தேய்த்தால் முடி உதிர்வது சுத்தமாக நின்றுவிடும்.

இதில் சேர்த்திருக்கும் அனைத்து பொருட்களும் நம் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் நம் முடிக்கு நல்ல கருமையான நிறத்தை வேரிலிருந்து தரக்கூடிய பொருட்களாகவும் இருப்பதால் இந்த ஹேர் டை பயன்படுத்தி கருமையான அடர்த்தியான முடியை பெறுவோம்.

- Advertisement -