சூப்பரான கோதுமை மாவு இடியாப்பம் ரெசிபி உங்களுக்காக.

idiyappam
- Advertisement -

பெரும்பாலும் எல்லோரும் அரிசிமாவில் தான் இடியாப்பம் செய்வார்கள். ஆனால், கொஞ்சம் வித்தியாசமான முறையில் கோதுமை மாவை வைத்து எப்படி இடியாப்பம் செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த ரெசிபியை எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

idiyappam3

வீட்டில் அரைத்த கோதுமை மாவிலும் இந்த இடியாப்பத்தை செய்யலாம். கடையில் வாங்கிய நல்ல பிராண்ட் கோதுமை மாவிலும் இந்த இடியாப்பத்தை செய்யலாம். உங்கள் வீட்டில் இருக்கும் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். 1 கப் கோதுமை மாவுக்கு, 1 கப் தண்ணீர் தேவை. இதுதான் சரியான அளவு.

- Advertisement -

முதலில் 1 கப் அளவு கோதுமை மாவை எடுத்து கடாயில் போட்டு வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த மாவு அப்படியே இருக்கட்டும்.

idiyappam2

அடுத்தபடியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எடுத்து வைத்திருக்கும் 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி, 2 சிட்டிகை உப்பு போட்டு, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள்.

- Advertisement -

ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் கோதுமை மாவுடன், சூடு செய்த இந்த தண்ணீரை ஊற்றி ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து விடுங்கள். கையை மாவில் வைத்து விடாதீர்கள். தண்ணீர் சுட சுட உள்ளது. ஒரு கரண்டியை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக 1 கப் அளவு தண்ணீரையும் முழுமையாக கோதுமை மாவில் ஊற்றி கலந்து விட வேண்டும்.

idiyappam4

இப்போது சூடாக கலந்த இந்த மாவை ஒரு தட்டு போட்டு மூடி விடுங்கள். ஒரு நிமிடம் அப்படியே சுடு தண்ணீரில் கோதுமை மாவு வெந்து விடும். அடுத்தபடியாக மாவு கை பொறுக்கும் சூடு வந்தவுடன், உங்கள் கையில், இந்த மாவை சப்பாத்தி மாவு போல நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவை பிசைந்த உடன் மாவின் மேலே ஒரு ஸ்பூன் எண்ணெயை தடவி அப்படியே 30 நிமிடங்கள் ஊறவைத்து விடுங்கள். அவ்வளவு தான். இடியாப்பம் செய்வதற்கு கோதுமை மாவு தயார்.

இந்த மாவை சிறு சிறு பாகங்களாக பிரித்து இடியாப்ப அச்சில் போட்டு, இடியாப்ப தட்டிலும் இடியாப்பம் பிழிந்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளலாம். இடியாப்ப தட்டு இல்லாதவர்கள் இட்லி தட்டிலும் இடியாப்பத்தை பிழிந்து, ஆவியில் வெறும் 5 நிமிடங்கள் வேக வைத்தால் போதும். (இடியாப்ப தட்டில், இட்லி தட்டில் மாவை பிழிவதற்கு முன்பு அந்த தட்டில் கொஞ்சம் எண்ணெயை தடவிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இடியாப்பம் வெந்த பின்பு ஒட்டாமல் வரும்.)

idiyappam5

முதலில் இட்லி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து விட்டு, அதன் பின்பு இடியாப்பம் பிழிந்த தட்டை, இட்லி பாத்திரத்திற்குள் வைத்து, 5 நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள். இந்த இடியாப்பம் வெந்தவுடன் தட்டில் ஒட்டாமல் அப்படியே சூப்பராக வந்துவிடும். இந்த இடியாப்பம் வேகும்போதே கோதுமை மாவின் வாசம் மூக்கைத் துளைக்கும். அட்டகாசமான சூப்பரான இடியாப்பம் தயார். இதற்கு தோதாக தேங்காய் பால் அல்லது சர்க்கரையுடன் தேங்காய் துருவிப்போட்டு பரிமாறி பாருங்கள். ஒரு ஹெல்தி பிரேக்ஃபாஸ்ட் அல்லது டின்னர் ரெடி.

- Advertisement -