கோதுமை மாவு இட்லி செய்வது எப்படி?

wheat idly Recipe
- Advertisement -

நம் அன்றாட உணவு பழக்கத்தில் இட்லி தோசைக்கு அடுத்தபடியாக அனைவரும் எடுத்துக் கொள்ளும் உணவு கோதுமை தான். இந்த கோதுமையில் நாம் இதுவரை சப்பாத்தி கோதுமை, தோசை போன்றவற்றை தான் அதிக அளவில் செய்து சாப்பிடுகிறோம். இன்று பெரும்பாலும் இரவு உணவை சப்பாத்தி ஆக மாறி விட்டது.

எப்பொழுதும் இப்படியே செய்து சாப்பிடாமல் கொஞ்சம் வித்தியாசமாக கோதுமை மாவில் ஒரு முறை இப்படி இட்லி செய்து சாப்பிட்டு பாருங்கள் சுவையும் அட்டகாசமாக இருக்கும். ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவு என்றே சொல்லலாம். வாங்க இப்போது இந்த இட்லி எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு -1 கப்
ரவை – 1/2 கப்,
தயிர் – 1/4 கப்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
உப்பு – 1/4 டீஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பேனை அடுப்பில் வைத்து சூடானதும் கோதுமையையும், ரவையும் ஒன்றாக சேர்த்து மூன்று நிமிடம் வரை வறுத்துக் கொள்ளுங்கள். இது நிறம் மாறி விடக் கூடாது லேசாக வாசம் வரும் வரை வறுத்தால் போதும். இதை நன்றாக வறுத்த பிறகு இதை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி சூடு ஆற விடுங்கள்.

- Advertisement -

அடுத்து இந்த மாவில் தயிர் உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இப்போது தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த மாவை தட்டு போட்டு அரை மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள். மாவு நன்றாக ஊறட்டும்.

அரை மணி நேரம் கழித்து கரைத்து வைத்த மாவில் கால் டீஸ்பூன் சமையல் சோடா மாவு சேர்த்து மீண்டும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். ஏனெனில் இதில் நாம் ரவை சேர்த்திருப்பதால் முதலில் தண்ணீர் ஊற்றி இருந்தாலும் மாவும் மறுபடியும் கட்டியாக மாறி இருக்கும்.

- Advertisement -

இப்போது இந்த மாவு இட்லி ஊற்ற தயாராகி விட்டது. எப்போதும் போல அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து சூடானவுடன் இட்லி ஊற்றி எடுத்து விடுங்கள். இந்த இட்லிக்கு நல்ல காரசாரமான சட்னி எதுவாக இருந்தாலும் சுவை அட்டகாசமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஆவாரம் பூ சட்னி செய்முறை

கோதுமை மாவில் இட்லி என்றால் அது வழுவழுப்பாக இருக்கும். சாப்பிட நன்றாக இருக்காது என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். இதில் நாம் சேர்த்திருக்கும் ரவை, தயிர் எல்லாம் கலந்து நாம் சாதாரணமாக செய்யும் இட்லியை விட சுவையாகவே இருக்கும். நீங்களும் ஒரு முறை செஞ்சு பாருங்க.

- Advertisement -