அட, கோதுமையை வெச்சு இந்த ஸ்நேக்ஸ் செய்ய வெறும் 10 நிமிஷம் போதுமே! கோதுமை மாவு கார அப்பம் சுவையாக எப்படி செய்வது?

gothumai-bonda

டீ போடுற டைம்ல, ஈவினிங் டைம்ல, டீ கூட ஒரு சூப்பரான காரசாரமான ஸ்நாக்ஸ் இருந்தால், எல்லோருக்கும் பிடிக்கும். என்ன ஸ்னாக்ஸ் செய்வது என்று தான் குழப்பம் இருக்கும். வீட்டில் இருக்கக்கூடிய கோதுமை மாவை வைத்து, சுவையாக ஆரோக்கியமாக இந்த கோதுமை அப்பத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கோதுமை மாவை வைத்து, சுவீட் அப்பம் மட்டுமல்ல காரம் அப்பம் கூட செய்யலாமே. மாவை எடுக்கறீங்க! கலக்குறீங்க! ஊத்தறீங்க! அவ்வளவு தான் பார்த்திரலாமா ரெசிபிய?

wheat-bonda-1

Step 1:
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கோதுமை மாவு ஒரு – 1 கப், பச்சரிசி மாவு – 1/4 கப், புளிக்காத கெட்டி தயிர் – 1/2 கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, மிளகாய் தூள் – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், கருவேப்பிலை கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது, தேவையான அளவு உப்பு, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும்.

Step 2:
நன்றாக மாவை கலந்து விட்ட பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, மாவு கெட்டிப்படாமல், இட்லி மாவு பதத்திற்கு வரவேண்டும். மாவு ரொம்பவும் தண்ணீர் படத்திலும் இருக்கக்கூடாது. ரொம்பவும் கெட்டிப் பதத்தில் இருக்க கூடாது. ஒருவேளை மாவு தண்ணீர் ஆகிவிட்டால், கொஞ்சம் கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளலாம்.

wheat

Step 3:
இறுதியாக 1/4 ஸ்பூன் அளவு சோடா உப்பை சேர்த்து, மாவை நன்றாக கலந்து ஐந்து நிமிடங்கள் வரை மூடி வைத்துவிடுங்கள். அதற்குள் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு செய்து கொண்டு. மாவிலிருந்து ஒரு குழி கரண்டி அளவு மாவை எடுத்து, அப்பம் போல எண்ணெயில் ஊற்றி எடுக்க வேண்டும்.

- Advertisement -

Step 4:
உங்களுடைய வீட்டில் ஃபிரெயிங் பேன் இருந்தால், நான்கு அப்பங்களை ஊற்றி,  பொன்னிறமாக சிவக்கும் அளவிற்கு பொறித்து எடுக்க வேண்டியது தான். கடாய் இருந்தால் 2 அப்ங்களாக ஊற்றி சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய எண்ணெயில் அப்பத்தை ஊற்றினால், மிகவும் ஆய்லியாக இருக்கும் என்று நினைப்பவர்கள், பணியாரக் கல்லிலும் இந்த கோதுமை அப்பத்தை சுட்டு எடுத்து பரிமாறினால் சுவையாகத்தான் இருக்கும்.

wheat-bonda-3

சிலபேர் இந்த மாவை மேலும் கட்டியாக கரைத்து, போண்டாவும் செய்வார்கள். இருப்பினும் கொஞ்சம் இட்லி மாவு பதத்திற்கு மாவை கரைத்து ஊற்றி, சாப்பிடுவது மேலும் சுவையை கூட்டும். மேல் பக்கம் மொறு மொறு என்றும், உள்பக்கம் சாஃப்டாகவும் இருக்கக் கூடிய இந்த அப்பம் சுவையாகத்தான் இருக்கும். ஆரோக்கியமானதும் கூட அல்லவா?

wheat-bonda-4

இதற்கு சைட் டிஷ் ஆக எதுவுமே தேவையில்லை. தேவைப்பட்டால் தேங்காய் சட்னியுடன் பரிமாறுங்கள். டீ குடிக்கிறப்ப நிறைவான ஸ்நாக்ஸாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. தயிரின் வாடை பிடிக்கவில்லை என்றால், தயிரை சேர்க்காமல் வெறும் தண்ணீரை விட்டுக் கூட இந்த அபத்தை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருக்கா? இன்னைக்கு ஈவினிங் டீ போடும்போது செஞ்சு பாருங்க.

இதையும் படிக்கலாமே
பச்சைப்பயிறு கிரேவியை ஒருவாட்டி இப்படி வெச்சு பாருங்க! சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் இது. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான கிரேவி செஞ்சிடலாம்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.