பச்சைப்பயிறு கிரேவியை ஒருவாட்டி இப்படி வெச்சு பாருங்க! சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் இது. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான கிரேவி செஞ்சிடலாம்.

pachai-payaru-gravy
- Advertisement -

இந்த பச்சைப்பயிறு கிரேவியை சப்பாத்தி மட்டுமல்ல, தோசைக்கும் சைட் டிஷாக செய்து சாப்பிடலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் பச்சைப்பயிறு கிரேவியை சுலபமான முறையில் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாரத்திற்கு ஒரு முறையாவது பச்சை பயிறை, நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. அதிகப்படியான ஃபைபர் சத்து, புரதச்சத்து அடங்கிய பச்சை கிரேவி குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒருவாட்டி இந்த டிப்ஸ் யூஸ் பண்ணி கிரேவி செஞ்சு பாருங்களேன்.

pachai_payaru

Step 1:
முதலில் 100 கிராம் அளவு பச்சை பயிறு எடுத்து, கடாயில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து, வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 5 நிமிடங்கள் வரை இந்த பச்சை பயிறை வறுத்து எடுத்துக் கொண்டால் போதும். அப்படி இல்லை என்றால் பச்சை பயிறை 5 மணி நேரம் தண்ணீரில் போட்டு ஊற வைத்தும், இந்த கிரேவியை செய்யலாம். தவறு ஒன்றும் கிடையாது. சிலபேர் முளைகட்டிய பச்சைப் பயிறிலும் இந்த கிரேவியை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

வறுத்த பச்சை பயிறை நன்றாக ஆற வைத்த பின்பு, தண்ணீரில் கழுவி, அதன் பின்பு கிரேவி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பச்சைப்பயிறு நான்கிலிருந்து, ஐந்து விசில் வைக்கும்போது நன்றாக வெந்துவிடும். ஊறவைத்தான் பச்சை பயிறு கிரேவி செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

pachai-payaru

Step 2:
முதலில் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, சீரகம் – 1 ஸ்பூன், பட்டை – 1 துண்டு, லவங்கம் – 1, பிரியாணி இலை – 1 இவைகளை சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்தபடியாக ஒரு கொத்து கறிவேப்பிலை, 1 பெரிய வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் வதக்கும்போது 1 டேபிள்ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ள வேண்டும். மிளகாய்த்தூள் 1 ஸ்பூன், தனியா தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், இவைகளை சேர்த்து வெங்காயத்தோடு ஒரு நிமிடம் வரை வதக்க வேண்டும். அடுத்தபடியாக ரொம்பவும் பொடியாக நறுக்கிய தக்காளி 2 சேர்த்து, இந்த கிரேவி தொக்கு பதம் வரும் வரை, வதக்கி கொண்டே இருக்க வேண்டும்.

thokku

Step 3:
இறுதியாக வறுத்து கழுவி வைத்திருக்கும் பச்சை பயிரை குக்கரில் சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பையும் சேர்த்து, நன்றாக கொதி வந்த பிறகு குக்கர் மூடியைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, நான்கிலிருந்து ஐந்து விசில் வைத்தால் போதும். கமகம வாசத்தோடு பச்சை பயிறு கிரேவி தயாராகி இருக்கும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி விட்டுவிடுங்கள்.

- Advertisement -

pachai-payaru2

இந்த கிரேவிக்கு, தேவைப்பட்டால் 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய், அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யையும், சேர்த்துக் கொள்ளலாம். இதன் சுவை இன்னும் கொஞ்சம் ரிச்சாக இருக்கும். சுட சுட சப்பாத்திக்கும் இந்த கிரேவியை செஞ்சு வச்சு சாப்பிட்டு பாருங்க! இதன் சுவை நாவில் ஒட்டிக்கொள்ளும். உடலுக்கு ஆரோக்கியம் தரும். நாவிற்கு சுவை தரும், சுலபமாகவும் செய்யக்கூடிய கிரேவி வகைகளில் இதுவும் ஒன்று. மிஸ் பண்ணாம உங்க வீட்லயும் இன்னிக்கு ராத்திரி ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
இந்த இலையால் அர்ச்சனை செய்வது இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -