- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்உருளைக்கிழங்கு சிப்ஸ் இப்படி மட்டும் செஞ்சு பாருங்க இனி கடையில் வாங்கவே மாட்டீங்க! வீட்டிலேயே தரமான...

உருளைக்கிழங்கு சிப்ஸ் இப்படி மட்டும் செஞ்சு பாருங்க இனி கடையில் வாங்கவே மாட்டீங்க! வீட்டிலேயே தரமான உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் எளிய முறை என்ன?

- Advertisement -

உருளைக்கிழங்கு சிப்ஸ் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாங்கி சாப்பிடும் ஒரு ஸ்நாக்ஸ் வகையாகும். எவ்வளவு கொடுத்தாலும் உருளைக்கிழங்கு சிப்ஸ் மட்டும் உடனே காலி ஆகிவிடும். அந்த அளவிற்கு அனைவரும் விரும்பும் இந்த மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் கடையில் காசு கொடுத்து இனி வாங்காமல், நம் வீட்டிலேயே எப்படி தரமான உருளைக்கிழங்கு சிப்ஸ் எளிதாக செய்வது? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு ஒரு பெரிய உருளைக்கிழங்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மெல்லியதாக சிப்ஸ் செய்வதற்கு ஏற்ப உங்களுடைய ஸ்லைடரில் தேய்த்து எடுத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கு சிப்ஸ் போடுவதற்கு என்று தனியாக ஸ்லைடர்கள் உண்டு. அப்படி அல்லாதவர்கள் கேரட் துருவும் கட்டரில் உருளைக்கிழங்கு ஸ்லைஸ் போடுவதற்கு என்று பிளேடு தனியாக கொடுத்து இருப்பார்கள். அதில் வேகமாக தேய்த்தால் மெல்லிய உருளைக்கிழங்கு ஸ்லைஸ்கள் கிடைக்கும்.

- Advertisement -

இந்த ஸ்லைஸ்களை நன்கு நாலைந்து முறை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சுத்தமான தண்ணீர் மூழ்கும் அளவிற்கு சேர்த்து கொஞ்சம் போல் தேவையான அளவிற்கு உப்பு போட்டு 15 நிமிடம் ஊற விட்டு விடுங்கள். இந்த உப்பு உருளைக்கிழங்கில் இறங்க வேண்டும். 15 நிமிடத்திற்கு பிறகு தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு ஸ்லைஸ்களை ஒரு மெல்லிய காட்டன் துணியில் போட்டு நன்கு ஈரப்பதம் இல்லாமல் துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் இது போல துடைத்து ஈரப்பதம் இல்லாமல் காற்றில் ஆறவிட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விட வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு மீடியம் ஃப்ளேமில் அடுப்பை வைத்துக் கொண்டு உருளைக்கிழங்கு சிப்ஸ்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரிய விட வேண்டும்.

- Advertisement -

மொறு மொறுவென்று இருபுறமும் பொரிந்து வந்தவுடன் ஜர்னியால் எண்ணெய் வடிகட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ்களை தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். எல்லா உருளைக் கிழங்குகளையும் இது போல இரண்டு புறமும் சிவக்க பொரித்து எடுத்ததும் கொஞ்சம் போல் வெறும் மிளகாய்த்தூளை தூவி கொள்ளுங்கள். அதன் பிறகு எல்லா இடங்களிலும் படரும்படி பிரட்டி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
கருப்பு உளுந்தை வச்சு பத்தே நிமிசத்துல சுவையான சட்னி அரைக்கலாம்னு உங்களுக்கு தெரியுமா? இந்த சட்னி அரைச்சு தினமும் உங்க சாப்பாட்ல சேத்துக்கோங்க .பெண்களுக்கு கருப்பை, எலும்பு சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையும் கிட்டயே வராது.

நீங்கள் உருளைக்கிழங்கு சிப்ஸ் மீது மிளகாய் தூள் சேர்க்கும் பொழுது சிட்டிகை அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். ஒரு முறை சேர்த்த பிறகு ஒரு முறை பிரட்ட வேண்டும். திருப்பியும் சேர்த்த பிறகு, திருப்பியும் பிரட்டி விட வேண்டும். இது போல செய்தால் தான் எல்லா இடங்களிலும் காரம் சீராக பரவலாக படரும். ரொம்பவும் மிளகாய் தூள் சேர்க்க தேவையில்லை கொஞ்சம் போல சேர்த்தாலே போதும். அதன் பிறகு நீங்கள் எடுத்து சுவைத்து பார்த்தால் அவ்வளவு கிரிஸ்பியாக மொறுமொறுன்னு இருக்கும். எண்ணெய் கூட அவ்வளவாக குடித்து இருக்காது. நீங்களும் இதே போல ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெசிபி சூப்பராகவே வரும். இனி கடையில் காசு கொடுத்து வாங்கவே முயற்சிக்க மாட்டீங்க, நீங்களே செஞ்சு சாப்பிடுவீங்க.

சற்று முன்