செலவே இல்லாமல் உங்களுடைய முகத்தை வெள்ளையாக மாற்ற சமையல் அறையில் இருக்கும் இந்த 1 மாவு போதும்.

face11
- Advertisement -

தினம் தினம் முகம் அழகாக இருக்க வேண்டும். ஆனால், செலவும் ஆகக்கூடாது. அதேசமயம் முகத்தில் பக்க விளைவுகளும் ஏற்படக் கூடாது என்றால் என்ன செய்வது. பின் சொல்லக்கூடிய குறிப்பை பின்பற்றினாலே போதும். கையில் இருக்கும் பணமும் கரையாது. அதேசமையும் அழகு நாளுக்கு நாள் மேலோங்கி கொண்டு செல்லும். இப்படிப்பட்ட சுலபமான இந்த குறிப்பை யாருமே தவற விடாதீங்க. இந்த பதிவில் மூன்று குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த மூன்றில் எது பிடிக்குதோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது மூன்றுமே பிடிக்கும் என்றால் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு குறிப்பை பயன்படுத்தலாம். அது அவரவர் விருப்பம்.

பின் சொல்லக்கூடிய எல்லா குறிப்புகளுக்குமே முதன்மை பொருளாக இருப்பது கோதுமை மாவு. எல்லோர் வீட்டு சமையலறையிலும் இந்த கோதுமை மாவு இருக்கும். மலிவாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள்தான் இது. நல்ல பிராண்ட் கோதுமை மாவை எடுத்து குறிப்புக்கு பயன்படுத்தலாம். முடிந்தவரை கோதுமையை வாங்கி அரைத்து கிடைக்கக்கூடிய அந்த கோதுமை மாவில் இந்த பேக்கை போட்டால் மிக மிக நல்லது. கோதுமை மாவில் மற்ற எந்த பொருட்களையும் சேர்த்து அரைக்காமல் தனி கோதுமை மாவை குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குறிப்பு 1:
ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு 1 டேபிள் ஸ்பூன், காய்ச்சாத பால் தேவையான அளவு, ஊற்றி இதை பேக்காக கலந்து அப்படியே முகம் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து, 2 நிமிடம் வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் உடனடியாக பொலிவு பெறும். முகத்தில் இருக்கும் அழுக்கு உடனடியாக நீங்கும். வெயில் பட்ட இடங்களில் இருக்கும் கருப்பு உடனே நீங்கும்.

குறிப்பு 2:
ஒரு சிறிய பவுலில் 1 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, தேவையான அளவு ரோஸ் வாட்டர், ஊற்றி நன்றாக கலந்து அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அப்படியே விட்டுவிட வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல ஜில்லுனு ஃபிரஷா தெரியும்.

- Advertisement -

குறிப்பு 3:
ஒரு பவுலில் 1 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் பாதாம் ஆயில், இந்த 3 பொருட்களை போட்டு நன்றாக கலக்க வேண்டும். தேவைப்பட்டால் இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கூட கலந்து கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை 15 நிமிடம் முகத்தில் போட்டால் முகம் டிரை ஆகாமல் எப்போதும் பொலிவாக இருக்கும். பாதாம் ஆயில் உங்களிடம் இல்லை என்றால் மரச்செக்கு தேங்காய் எண்ணெய் 1/4 ஸ்பூன் அளவு இதில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

மூன்று குறிப்புமே எல்லா வகையான ஸ்கின்னுக்கும் பொருந்தக் கூடியதுதான். சிலருக்கு பால் செட்டாகாது. சிலருக்கு தேங்காய் எண்ணெய் முகத்தில் போட்டால் செட் ஆகாது. இப்படிப்பட்டவர்கள் அந்த பொருட்களுக்கு பதிலாக நீங்கள் வேறு ஏதாவது மாற்றுப் பொருளை பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்திற்கு பாலுக்கு பதில், தயிர் சேர்க்கலாம், தக்காளி பழச்சாறு, வெள்ளரிக்காய் சாறு உருளைக்கிழங்கு சாறு, அல்லது வெறும் தண்ணீரை ஊற்றி கூட கலந்து இந்த பேக்கை முகத்தில் போட்டுக் கொள்ளலாம். தினமும் இந்த பேக்கை முகத்தில் போட்டால் கூட எந்த பக்க விளைவுகளும் வராது. ட்ரை பண்ணி பாருங்க செலவில்லாம பேரழகியா மாறுவீங்க.

- Advertisement -