ரவையை வைத்து சூப்பரான இந்த அடை செய்வது எப்படி? இந்த ‘ரவை அடை’ செய்வதற்கு வெறும் 10 நிமிடம் போதுமே.

adai
- Advertisement -

காலையில் என்ன டிபன் செய்வது என்பதே தெரியவில்லை. வீட்டில் இட்லி மாவும் இல்லையே என்று யோசிக்கும்போது, இந்த ரவை அடையை டக்குனு செஞ்சிடலாம். ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவும் இந்த அடையை செய்து சாப்பிடலாம். மாவு அரைக்க வேண்டாம். ஊற வைக்க வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அடை பிசைந்து, தட்டி தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் அடை தயார். உடனடியா செய்யக் கூடிய அடை ரெசிபியை உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா. வாங்க இப்பவே பார்த்திடலாம்.

adai2

முதலில் இந்த அடைக்கு தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். ரவை – 1 கப், கோதுமை மாவு- 1 கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2, இஞ்சி துருவல் – 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கியது, பெருங்காயம் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை தேவையான அளவு, தயிர் – 1/4 கப், உப்பு தேவையான அளவு, நல்லெண்ணெய் அடையை சுட்டு எடுப்பதற்குத் தேவையான அளவு. (கோதுமை மாவு 200 கிராம், ரவை 200 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மேலே சொன்ன அளவுகளில் எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு, தண்ணீர் ஊற்றாமல் முதலில் எல்லா பொருட்களையும் கலந்து விட்டு விடுங்கள். அதன் பின்பு ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த கலவையோடு தண்ணீரைத் தெளித்து நன்றாக, மாவை அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

adai1

அடை தோசை ஊற்ற போவது கிடையாது. மாவை கெட்டியான பதத்தில் பிசைந்து ஒவ்வொரு, சிறிய உருண்டைகளாக உருட்டி, ஒரு வாழை இலையின் மேல் எண்ணெயை தடவி, அதன் மேல் ஒரு அடை உருண்டையை வைத்து, விரல்களால் சம அளவுகளில் தட்டி இந்த அடையை எடுத்து தோசைக்கல்லில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பக்குவமாக சிவக்க வைத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் வாழை இலை இல்லை என்றால், பால் கவர் அல்லது வேறு ஏதாவது கொஞ்சம் திக்கான கவரின் மேல் எண்ணெயை தடவி இந்த அடையை விரல்களால் சம அளவில் தட்டி தோசைக்கல்லில் போட்டு எடுக்க வேண்டும். அடையை மொத்தமாக தட்டி விட்டால், தட்டிய அடை மேலே சிவக்கும். உள்ளே சீக்கிரத்தில் வேகாது.

adai3

தோசைக்கல்லில் போட்டு அடையை மிதமான தீயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சிவக்க வைத்து எடுத்துக் கொண்டால் ரவை அடை தயாராகி இருக்கும். இந்த ரவை அடை சாப்பிடுவதற்கு மிக மிக சுவையாக இருக்கும். அதேசமயம் சீக்கிரமே செய்து விடலாம். மாவை ஊற வைக்க வேண்டும் அரைக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -