பெண்கள் தங்கள் தாலி கயிறை எப்படி, அப்போது மாற்றுவது சிறந்தது தெரியுமா?

amman-7

ஒரு பெண்ணிற்கு மிக மிக முக்கியமாக கருதப்படுவது அவளின் மாங்கல்யம். ஹோமம் வளர்த்து பல மந்திரங்களை ஜபித்த பின்னரே மாங்கல்யம் ஒரு பெண்ணின் கழுத்தில் ஏறுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க மாங்கல்யத்தின் கயிறை ஒரு பெண் எங்கு எப்போது மாற்றுவது சிறந்தது என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

mangalyam

தாலிக்கயிறு பழசாகிவிட்டால் அதை மாற்றுவது பெண்களின் வழக்கம். ஒரு சிலர், மாங்கல்யம் பழுதாகினால் புது மாங்கல்யத்தை செய்து அணிவதும் வழக்கம். இத்தகைய செயல்களை திங்கள், செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் செய்வது நல்லது.

மாங்கல்யத்தையோ அல்லது மாங்கல்ய கயிரையோ மாற்ற நினைப்பவர்கள் காலை உணவை அருந்தாமல், மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு நாளில் கோயிலிற்கு சென்று கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது நல்லது. இப்படி செய்வதன் மூலம் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர் என்பது ஐதீகம்.

mangalyam

மாங்கல்ய கயிரையோ அல்லது மாங்கல்யத்தையோ கண்டிப்பாக ராகு காலம், எமகண்டம் போன்ற நேரத்தில் மாற்றவே கூடாது. மேலும் மாங்கல்யத்திலும், மாங்கல்ய கயிறிலும் அதிகமாக அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வது பெண்களின் முக்கிய கடமையாகும்.

- Advertisement -

thali kayiru

 

இதையும் படிக்கலாமே:
எந்த விரலால் திருநீறு இட்டுக்கொள்வது நல்லது தெரியுமா?

அழுக்கோடு உள்ள தாலிக்கயிறை வெகு நாட்கள் அணிந்திருந்தாள் அந்த பெண் வசிக்கும் குடும்பத்தில் வறுமை வந்தடையும். அதோடு தேவை இல்லாத மன சஞ்சலம் ஏற்படும். ஆகையால் அடிக்கடி தாலிக்கயிறை மாற்றுகிறோமே என்று நினைக்காமல், அதிகமாக அழுக்கு படிந்தால் தாலிக்கயிறை மாற்றுவதே சிறந்தது. அதோடு தலிக்கயிறில் தேவையற்ற பொருட்களான ஊக்கு, சாவி போன்ற எதையும் தொங்க விடமால் தவிர்ப்பது நல்லது.