அடடே! பால் புளித்து விட்டால், அதை வைத்து இப்படி ஒரு விஷயத்தை செய்ய முடியுமா? ஆச்சரியமா இருக்கே!

whey-water-silver
- Advertisement -

பால் புளித்து விட்டால் உடனே பலரும் அபசகுணமாகவே நினைக்கின்றனர். பால் புளித்து விடுவதும், வீட்டில் தெரியாமல் விளக்கு அணைந்து விட்டாலும் உடனே பதற்றம் கொள்ள தேவையில்லை. இவை எல்லாம் இயற்கையாக நடக்கும் விஷயங்கள் தான். இயல்பான ஒரு விஷயத்தை நம் மனம் சகுனத்துடன் இணைத்து பார்ப்பதால் பதறுகிறது. வீட்டில் பால் புளித்து விட்டால் அதனை என்ன செய்வது? என்று தெரியாமல் பலரும் கீழே கொட்டி விடுகின்றனர். அதை வைத்து இப்படி ஒரு காரியமும் செய்ய முடியும் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

whey-water

பால் புளித்து விட்டால் அதனை வைத்து வெள்ளி பாத்திரங்கள் மற்றும் வெள்ளி பூஜை பொருட்களை புத்தம் புதியதாக மாற்றி விடலாம். பித்தளை பாத்திரங்களை கூட சுலபமாக புத்தம் புதிய பாத்திரமாக மாற்றி விட முடியும். ஆனால் இந்த வெள்ளி பாத்திரங்களை சுத்தம் செய்வது மிகவும் கடினமான காரியமாகவே இருந்து வருகிறது. வெள்ளி பூஜை சாமான்கள் கூட தொடர்ந்து உபயோகித்தால் கருமை படர்ந்து விடும். அதனை நீக்கி பழையபடி புத்தம் புதியதாக மாற்றுவது சிரமமான காரியம் தான். சாதாரண சோப்பு பயன்படுத்தி நம்மால் அவற்றை பளபளக்க வைத்து விட முடியாது.

- Advertisement -

இந்த புளித்த பாலைக் கொண்டு இந்த ஒரு காரியத்தையும் சாதிக்க முடியும். பால் புளித்து விட்டால் வேகமாக அவற்றை அப்புறப்படுத்துவதில் ஈடுபடாதீர்கள். புளித்த பாலை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும் அதில் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து உங்களுடைய வெள்ளி நகைகள் அல்லது வெள்ளிப் பாத்திரங்களை மூழ்கும்படி அரை மணி நேரம் ஊற விடுங்கள்.

silver-things

புளித்த பாலில் இருக்கும் அமிலத்தன்மை வெள்ளி பொருட்களை பளபளப்பாக மாற்றி தரும். வெள்ளி நகைகளை இவ்வாறு செய்துவிட்டு பின்னர் சோப்பு போட்டு லேசாக பிரஷ் செய்தால் போதும். புத்தம் புதிய நகை போல பளபளன்னு மின்னும். இதே போல வெள்ளி பூஜை சாமான்கள் மற்றும் பாத்திரங்களை செய்தால் அதில் இருக்கும் கருமை முழுவதுமாக நீங்கி புதியதாக ஜொலிக்கும்.

- Advertisement -

திரிந்த பாலில் இருக்கும் தண்ணீரில் எவ்வளவு சத்துக்கள் அடங்கி இருக்கிறது தெரியுமா? அதனை வீணாக கீழே கொட்டுவதற்கு பதிலாக சமையலுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதனால் புரதம் மற்றும் தாது சத்துக்கள் நமக்கு கிடைக்க பெறும். இவைகள் தசைகளை வலிமையாக பெரிதும் உதவி செய்கின்றன. பால் திரிந்து விட்டாலே கெட்டுப் போய்விட்டது என்று நினைப்பது தவறாகும். திரிந்த பாலில் இருந்து தான் பன்னீர் தயாரிக்கப்படுகிறது என்பதை மறந்து விடாதீர்கள். திரிந்த பாலின் தண்ணீரை வைத்து சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிகவும் சாஃப்ட்டாக வரும். அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் நம் ஆரோக்கியத்திற்கு உதவும்.

whey-water1

புளித்துப் போன இந்த பாலிற்கு ஆங்கிலத்தில் ‘வே வாட்டர்’ என்று கூறுவது உண்டு. இதிலிருக்கும் சத்துக்களை நீங்களே அலசி ஆராய்ந்து பாருங்கள். புளித்த பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு பயன்கள் உள்ள புளித்த பாலை இனியும் வீணாக்காமல் உபயோகமான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதில் சில வடிகட்டி சிறிது சர்க்கரை சேர்த்து அப்படியே சாப்பிடுவார்கள். அது சரியா? தவறா? என்கிற குழப்பம் நிறைய பேருக்கு நிச்சயமாக இருந்திருக்கும். அவ்வாறு சாப்பிடுவதால் எந்த பக்க விளைவுகளும் இல்லை மாறாக சத்துக்கள் நிறைந்தது தான் என்பதை கூறி இப்பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
இந்தப் பாலை 1 டம்ளர் மட்டும் குடித்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? அனைவரையும் வியக்க வைக்கும் அற்புதமான உண்மைகள்!

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -