எந்த 4 ராசிக்காரர்கள் சிவனின் அம்சத்தில் பிறந்தவர்கள்! உங்கள் ராசியும் இந்தப் பட்டியலில் இருக்கிறதா என்பதை, தெரிந்து கொள்ள வேண்டுமா?

sivan-astro

பூமியில் மனிதனாக அவதாரம் எடுத்திருக்கும் 12 ராசிக்காரர்களும் அந்த இறைவனின் அம்சத்தில் பிறந்தவர்கள் தான். எனினும் குறிப்பாக சிவபெருமானின் அருளைப் பெற்று இருக்கும் அந்த குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்கள் யார் யார்? எதனால் இந்த ராசிக்காரர்கள் மட்டும் எம்பெருமானுக்கு மிகவும் விருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்! என்ற காரணத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளலாம் இந்த பதிவின் மூலம்.

sivan

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே ஆன்மீக சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபாடு அதிகமாகவே இருக்கும். தெய்வத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருப்பார்கள். தங்களால் ஒரு வேலையை செய்ய முடியாத பட்சத்தில், அந்த வேலையால் மற்றவர்கள் பயன் அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மற்றவர்களுக்கு அந்த செயல்பாட்டை பகிரும் குணம் கொண்டவர்கள் மேஷராசிக்காரர்கள்.

அதுமட்டுமல்லாமல் வைத்தியநாதன் என்று போற்றப்படும், அங்காரகன் என்று போற்றப்படும், ஆறுமுகன் என்று போற்றப்படும், சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்த அந்த முருகப்பெருமானின் ராசி மேஷ ராசி என்பது குறிப்பிடத்தக்கது. மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு எப்போதுமே சிவபெருமானின் அனுக்கிரகமும், ஆசீர்வாதமும் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதேபோல் மேஷ ராசிக்காரர்களும் சிவபெருமானிடமும், முருகப்பெருமானிடம் அதீதமான அன்புடன் சேர்ந்த பக்தியை வைத்திருப்பார்கள் என்று சொன்னால் அது பொய்யாகாது.

kadagam

கடகம்:
கடக ராசிக்காரர்கள் அம்பாளின் அம்சம் பொருந்தியவர்கள், அதாவது சந்திரன். பார்வதி தேவியின் அம்சம் கொண்டவர்கள் கடக ராசிகாரர்கள். அதாவது ‘சூரியன் சந்திரன்’ ‘சிவன் பார்வதி’ சூரியன் சிவன் குறிக்கிறது, சந்திரன் பார்வதியை குறிக்கிறது, ஆகவே பார்வதி தேவியின் அம்சம் பொருந்திய கடக ராசிக்காரர்களையும் எம்பெருமானுக்கு மிகவும் பிடிக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

பொதுவாகவே கடக ராசிக்காரர்கள் அடுத்தவர் கஷ்டத்தை உணர்ந்து நடந்து கொள்வார்கள். அதிகப்படியான தாய் பற்றுக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களது மனதை புண்படும்படி எக்காரணத்தைக் கொண்டும் கடக ராசிக்காரர்கள் நடந்து கொள்ளவே மாட்டார்கள். ஆகவே, இந்த ராசிக்காரர்கள் சிவனின் அம்சம் பொருந்தியவர்கள் என்பதுதான் உண்மை. பார்வதி தேவியின் அம்சம் கொண்ட கடக ராசிக்காரர்களின் மீது சிவனின் பார்வை படாமல் இருந்து விடுமா?

kanni

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு மனது எப்போதும் கள்ளம் கபடம் இல்லாமல் இருக்கும். யார் எதை சொன்னாலும், அதை முதலில் நம்பி விடுவார்கள். அவர்களிடம் இருக்கும் பொருளை இல்லை என்று சொல்லாமல், அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவி செய்யும் மனப்பக்குவம் கொண்டவர்கள். முடிந்தவரை மற்றவர்களுக்கு நன்மை மட்டுமே செய்யக்கூடிய இந்த கன்னி ராசிக்காரர்களும் எம்பெருமானுக்கு மிகவும் பிடித்தவர்களாகவே சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

கும்பம்:
உழைப்பையே உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கும், பூரண கும்பத்தோடு வாழும், தகுதி பெற்றவர்கள் கும்ப ராசிக்காரர்கள். ஆனால், இவர்கள் எல்லோரையும் வெகுளித்தனமாக நம்பி விடுவார்கள். எல்லோரும் நல்லவர்கள் தான் என்ற நம்பிக்கை வைத்து உதவியை செய்து விட்டு, ஏமாந்து நிற்கும் இவர்களையும் எம்பெருமானுக்கு மிகவும் பிடிக்குமாம்.

kumbam

அடுத்தவங்க சந்தோஷமாக இருக்க, இவங்க கடன் வாங்கி செலவு பண்ணுவாங்க! இப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள் தான் கும்ப ராசிக்காரர்கள். ஆனால் கடைசியில் இவர்களுக்கே பிரச்சினை திரும்பும் என்பது கூட தெரியாத அளவிற்கு வெகுளி குணம் கொண்டவர்கள்.

அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடிய மனப்பக்குவம் கொண்ட அனைவருமே அந்த இறைவனின் அம்சம் தான் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதிலும் குறிப்பிட்ட இந்த நான்கு ராசிக்காரர்கள் எந்த நாட்களில் தானம் செய்தால் மிக அற்புதமான பலனை அடையமுடியும் என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

mesham

மேஷம்_உங்களால் முடிந்தவரை திங்கட்கிழமைகளில் அன்னதானம் செய்து, எம்பெருமானின் ஆசீர்வாதத்தை மேலும் மேலும் பெற்றுக் கொள்வதன் மூலம் உங்களது வாழ்க்கை சிறப்படையும்.

கடகம்_கடக ராசிக்காரர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் கஷ்டப்படும் பெண்களுக்கு உதவி செய்வது அதிகப்படியான பலனைப் பெற்றுத் தரும். அதாவது உடல் ஊனமுற்ற பெண்கள், படிக்க முடியாத பெண் குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த உதவி, இப்படி செய்து வரலாம்.

கன்னி_கன்னி ராசிக்காரர்களுக்கு எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம், அகத்திக்கீரை, வாழைப்பழம் போன்ற பொருட்களை வாங்கிக் பசுவிற்கு கொடுக்கலாம்.

கும்பம்_கும்ப ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் உங்களால் முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்கு செய்யுங்கள். அன்னதானம், ஆடை தானம் போன்ற பொருட்களை இல்லாதோர்க்கு தானம் செய்வது உங்களது வாழ்க்கையை மேலும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல உதவியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
வாஸ்து ஆமை உங்களை என்ன செய்யும்? எங்கு வைத்தால் அதிர்ஷ்டம் காணலாம் தெரியுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Jothida palangal Tamil. Jothida kanippu Tamil. Astrology Tamil. Sivan astrology.