எந்த கிழமையில் எந்த மலரை கொண்டு பூஜித்தால் நன்மை பெருகும் தெரியுமா ?

0
890
Murugan

ஞாயிறு
தாமரை மலர்களை சமர்ப்பித்து இறைவனை வழிபட்டால், குடும்பத்தில் இருக்கும் மனக்குறைகள் நீங்கி, குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.

lotus

திங்கள்
முல்லை,மல்லிகை போன்ற மலர்களை கொண்டு இறைவனுக்கு பூஜை செய்தால், விரோதங்கள் மறையும், மனசங்கடங்கள் நீங்கும்.

செவ்வாய்
அரளி, கஸ்தூரி போன்ற சிகப்பு பூக்களை மாலையாகவோ பூச்சரமாகவோ தொடுத்து துர்க்கைக்கு அணிவித்தால், திருமணத்தடைகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

Arali flower

புதன்
புதன்கிழமையை பொறுத்தவரை எல்லா வகையான மலர்களாலும் இறைவனை பூஜிக்கலாம். இதனால் நல்ல அறிவாளியான குழந்தைகள் பிறப்பார்கள். பிள்ளைகளின் கல்வி கேள்விகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன்
சாமந்தி, செவ்வந்தி போன்ற மஞ்சள் நிற மலர்களைக்கொண்டு அர்ச்சித்தால்,திருமணத்தடைகள், வியாபார முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் ஏற்றம் பெறும், குழந்தை பாக்கியம் அமையும்.

samandhi flower

வெள்ளி
மல்லிகை மலர்களால் இறைவனை பூஜை செய்தால், நோய்கள் நீங்கும், செல்வம் பெருகும், பிள்ளைகளுக்கு நன்மை உண்டாகும்.

சனி
மனோரஞ்சித மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்தால், மன தைரியம் கூடும், நல்ல சிந்தனைகள் வளரும். வாழ்வில் இருந்த தேக்க நிலை அகலும், புதிய உற்சாகம் பிறக்கும்.