ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நாளை நாம் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இந்த நல்ல நாளில் பொதுவாக அனைவரும் அவரவர் வீட்டில் உள்ள விநாயகர் சிலையோடு சேர்த்து களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரையும் வழிபடுவது வழக்கம்.
விநாயகரை பொதுவாக வீட்டின் ஹாலிலோ அல்லது பூஜை அறையிலோ வைத்து வழிபடுவோம். அனால் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட சில வாஸ்து முறைகள் இருக்கின்றன. வாருங்கள் அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.
முழு முதற் கடவுளான விநாயகரின் தும்பிக்கையானது எப்போதும் இடதுபுறமுள்ள அவரின் தாயார் கௌரியை பார்த்த வண்ணமே இருக்க வேண்டும். விநாயகரின் பின்புறமானது வறுமையை குறிக்கும் ஆகையால் அவரது பின்புறமானது வீட்டின் எந்த அறையையும் பார்த்தபடி இருக்க கூடாது.
கிழக்கு அல்லது மேற்கு திசையில் தான் விநாயகரை வைத்து வணங்க வேண்டும். தென்புறமாக விநாயகரை வைத்து வணங்கக்கூடாது. வீட்டின் அசுத்தமான அறைகளான ஸ்டோர் ரூம் கழிவறை போன்ற அறைகள் இணைக்கப்பட்டுள்ள சுவரை நோக்கி விநாயகரை வைக்கக்கூடாது.
உலோகத்தில் செய்யப்பட்ட விநாயகரை வடகிழக்கு மூலையில் வைத்து வணங்குவது சிறந்தது. வட கிழக்கு மூலையில் வைக்க முடியாதவர்கள் கிழக்கு அல்லது மேற்கு திசையினை பார்த்தபடி வைத்து வணங்கவேண்டும்.
நாம் ஏறி இறங்கும் படிகளுக்கு கீழ்(மாடி படி) விநாயகரை வைக்கவே கூடாது. அது அவரது தலை மீது கால் வைத்து ஏறி இறங்குவதற்கு சமமாகும்.
வாஸ்துப்படி விநாயகரை முறையாக வைத்து வணங்குவதால் வீட்டில் உள்ள சங்கடங்கள் அனைத்தும் விலகி நிம்மதி பெருகும். அதோடு வீட்டில் செல்வம் சேரும்.