வாஸ்துப்படி எந்த நாளில் பூமி பூஜை போட்டால் வீட்டை தடையின்றி கட்டலாம்

boomi-pujai
- Advertisement -

”வீட்டு மனை வாங்கியவர்கள் என்றைக்கு பூமி பூஜை போட்டு வீடு கட்டத்தொடங்க வேண்டுமென்பதை நம் முன்னோர்கள் தெளிவாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர்.

boomi pujai

பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும். இந்த வகையில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம்.

- Advertisement -

வாஸ்து விழிப்பு நாள்:

சித்திரை 10-ம் தேதி சூரியன் உதயமான நேரத்திலிருந்து 5 நாழிகைக்குப் பிறகும் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும்), வைகாசி 21- ம் தேதி 8 நாழிகைக்குப் பிறகும், ஆடி 11- ம்தேதி 2 நாழிகைக்குப் பிறகும், ஆவணி 6 – ம் தேதி 21 நாழிகைக்குப் பிறகும், ஐப்பசி 11- ம் தேதி 2 நாழிகைக்குப் பிறகும், கார்த்திகை 8- ம் தேதி 10 நாழிகைக்குப் பிறகும்,தை 12 – ம் தேதி 8 நாழிகைக்குப் பிறகும், மாசி 22 – ம் தேதி 8 நாழிகைக்குப் பிறகும் வரும் நேரமே வாஸ்து விழிப்பு நேரமாகும்.

- Advertisement -

boomi pujai

இந்த நாட்களில் வாஸ்து பகவான் மூன்றே முக்கால் நாழிகை வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும். அதாவது ஒன்றரை மணி நேரம் வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார்.

இந்த ஒன்றரை மணி நேரத்தில் முதல் 18 நிமிடங்கள் காலைக் கடன்களை முடித்து குளிப்பார். அடுத்த 18 நிமிடங்கள் பூஜை செய்வார். அதற்கு அடுத்த 18 நிமிடங்கள் சாப்பிடுவார். பின்னர் 18 நிமிடங்கள் வெற்றிலை பாக்குப் போடுவார். கடைசி 18 நிமிடங்கள் ஆட்சி செய்வார். இந்த நேரத்தில் பூமி பூஜை போட்டு வீடு கட்டத் தொடங்கினால், வேலைகள் வெகு சீக்கிரம் முடியும்.

- Advertisement -

boomi pujai

இந்தத் தேதிகளில், கிழமைகள் மாறுபட்டு வந்தாலும், இந்தத் தேதிகள் மாறுவதில்லை. அந்த விதத்தில், மார்ச் 6 ம்தேதி வாஸ்து புருஷன் விழித்துக்கொள்ளும் நாள்.

இந்த நாளில் காலை 10.36 முதல் 11.00 மணிக்குள் ரிஷப லக்னத்திலும் பூமி பூஜை செய்யலாம். அல்லது மதியம் 12.35 முதல் 1.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் பூமி பூஜை செய்யலாம்.

bhoomi-puja

வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாட்கள் தவிர, மற்ற சுப நட்சத்திரங்களில் வாஸ்து பூஜை செய்யலாம். அவ்வாறு செய்யும் நாட்களில் ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப லக்கினம் சிறந்தது. வாஸ்து பூஜை செய்ய திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் சிறந்தவை.

ரோஹிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சுவாதி, அனுஷம், உத்திராடம் திருவோணம், சதயம், உத்திரட்டாதி,ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் கூடிய நாட்களில், துதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் கூடிய நாட்களில் பூமி பூஜை செய்யலாம். நாம் தேர்ந்தெடுக்கும் லக்னத்துக்கு 8, 12 -ம் இடங்களில் சுப கிரகங்கள் இல்லாமல் இருக்கவேண்டும் என்பது முக்கியவிதியாகும்.

bhoomi-puja

உத்திராடம், பரணி, பூரம் பூராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் உள்ளவர்கள், இன்று பூமிபூஜை செய்யாமல் வேறுநாளில் செய்வது நல்லது. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரக்காரர்கள் பூமி பூஜை செய்தால் பரிகார பூஜை செய்வது நல்லது.

இதையும் படிக்கலாமே:
எந்த ராசிக்காரருக்கெல்லாம் தெற்குப் பார்த்த வாசல் நல்லது தெரியுமா ?

English Overview:
Here we have Bhoomi pooja dates in Tamil as per vasthu sasthiram.

- Advertisement -