வீட்டில் எந்த இடத்தில் பணப்பெட்டி வைத்தால் செல்வம் சேரும்

panapettil

பொதுவாக சிலரது வீட்டில் பண வரவு நன்றாக இருக்கும் அனால் அதற்கு ஏற்றாற்போல் செலவும் இருக்கும். அதே போல் சிலர் எவ்வளவுதான் உழைத்தாலும் அவர்கள் வீட்டில் பண தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கும்.

இதற்கு மிக முக்கிய காரணம் அந்த வீட்டில் பணப்பெட்டி இருக்கும் இடம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வாருங்கள் எந்த இடத்தில் பணப்பெட்டி வைத்தால் என்ன நடக்கும், பணப்பெட்டி வைக்க சிறந்த இடம் எது என்பதை விரிவாக பார்ப்போம்.

வடகிழக்கு மூலையில் பணப்பெட்டி இருந்தால் என்னவாகும்?

வீட்டில் எந்த அளவிற்கு பணம் வருகிறதோ அதே அளவிற்கு மருத்துவ செலவும் இருக்கும். வீட்டில் உள்ள பிள்ளைகள் தாய் தந்தையர் சொல்பேச்சை கேட்கமாட்டார்கள்.

- Advertisement -

தென்கிழக்கு மூலையில் பணப்பெட்டி இருந்தால் என்னவாகும்?

தேவையற்ற செலவுகள் நிறைய இருக்கும் அதோடு கொடுத்த கடன் எதுவும் திருப்ப வரவே வராது.

வடமேற்கு மூலையில் பணப்பெட்டி இருந்தால் என்னவாகும்?

கடன் தொல்லை அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க இன்னொரு இடத்தில கடன்வாங்க நேரிடும். மொத்தத்தில் நிரந்தர கடன்காரனாக வைத்து அல்லல்படுத்திவிடும்.

தென்மேற்கு மூலையில் பணப்பெட்டி இருந்தால் என்னவாகும்?

வீட்டின் தேர்மேற்கு மூலையே பணப்பெட்டி வைக்க சிறந்த இடமாகும். இது தான் குபேர முலை. இங்கு வடக்கு திசை பார்த்த மாதிரி பணப்பெட்டி வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டு இருக்கும் அதோடு செலவுகளை கட்டுப்படுத்தி பணத்தை சேமிக்கலாம். அதுவே கிழக்கு திசை பார்த்த மாதிரி பணப்பெட்டி வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டு இருக்கும் அதோடு வீட்டில் பல சுப நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும்.