எந்த எண்ணெயில் விளக்கேற்றினால் நல்லது

vilaku2

சமீப காலமாக விளக்கேற்றுவதற்கென்று தனியாக எண்ணெய்கள் விற்கப்படுகிறது. அதோடு மூன்று அல்லது ஐந்து எண்ணெய்களை கலந்து அதில் விளக்கேற்றினால் நல்லது என்றொரு புரளியும் வளம் வருகிறது. இதெல்லாம் வெறும் விளம்பர யுக்தியே தவிர சாஸ்திரங்களில் இது போன்று எதுவும் கூறப்படவில்லை.

நாம் சமயலிற்கு பயன்படுத்தும் தூய நல்லெண்ணெயிலேயே விளக்கேற்றலாம் அதில் எந்த தவறும் இல்லை. கறுப்பு எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் தீபம் ஏற்றுவது சாலச்சிறந்தது. இதேபோல் மற்ற எண்ணெய்களிலும் விளக்கேற்றலாம் அனால் ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணெய்களை கலந்து விளக்கேற்ற வேண்டாம். எந்த எண்ணெயாக இருந்தாலும் ஒரு எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும் என்பதே ஆகம முறையாகும்.