எந்த கிரக தோஷம் நீங்க எந்த விலங்குக்கு உணவு கொடுப்பது பலன் தரும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

navagragam

ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் சில கிரகங்கள் தோஷம் பெற்று இருக்கும். அந்த கிரகத்தின் படி அந்த ஜாதகருக்கு சில பிரச்சனைகளை வாழ்க்கையில் உண்டாக்கும். இது எல்லாருக்கும் ஒரே மாதிரியான பலன்களை தராது. அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப பிரச்சனைகளும் மாறுபட்டு இருக்கும். பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் உண்டா? தங்களின் கர்ம வினை பலன்களை குறைக்க எவ்வளவோ வழிகளை பின்பற்றி வருகிறோம். அதில் விலங்குகளுக்கு உணவளிப்பதும் ஒன்றாக இருக்கிறது.

Pasu

பித்ரு தோஷம் நீங்க நமது முன்னோர்கள் வழி வழியாக பின்பற்றி வரும் பரிகாரமாக பசுவிற்கு உணவளிக்கும் பழக்கம் வழக்கத்தில் இருப்பது அனைவரும் அறிந்ததே. பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழம் கொடுப்பது கர்ம வினை தீர்ந்து, பித்ரு தோஷம் நீங்கி செழிப்புடன் வாழ வகை செய்து கொடுக்கும். அது போல கிரங்கங்களின் தோஷம் நீங்கவும், அதன் தாக்கம் குறையவும், செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடவும் எந்த வகையான விலங்குகளுக்கு, என்ன உணவு கொடுக்கலாம்? என்று இப்பவிதிவில் நாம் விரிவாக காணலாம்.

ராகு-கேது:
ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் பைரவரின் வாகனமான நாயிற்கு உணவு அளித்து வருவது பலன் தரும். ஊர்வனவற்றிக்கு உணவு அளிப்பதும் நன்மை தரும்.

ant

சூரியன்:
குதிரை. குதிரைக்கு உணவு அளித்தால் சூரிய கிரகத்தினால் உண்டாகக் கூடிய தோஷங்கள் நிவர்த்தி ஆகும். அவர் தரும் கெடு பலன்கள் குறைந்து நல்வாழ்வு பெறுவீர்கள்.

- Advertisement -

சந்திரன்:
சந்திரனின் முக்கியத்துவம் பலரும் அறியாமல் இருக்கலாம். சந்திரன் இன்றி எந்த காரியமும் இல்லை. மனமும், உடலும் பலம் பெற சந்திரனின் அருள் இருக்க வேண்டும். ஜாதகத்தை பார்த்து பலன் சொல்பவர்கள் சந்திரன் இருக்கும் இடத்தையும் பார்த்தே பலன் கூறுவர். சந்திர தோஷம் இருந்தால் நீரில் வாழும் உயிர்களுக்கு உணவு அளிக்கலாம். மீனுக்கு உணவு கொடுப்பது பலன் தரும்.

Monkey

செவ்வாய்:
செவ்வாய் ஜாதகருக்கு திருமண தோஷத்தை தருகிறது. செவ்வாய் தோஷம் என்றவுடன் பயம் வருகிறது. ஆனால் உண்மையில் பயம் கொள்ளும் அளவிற்கு செவ்வாய் தோஷம் ஒன்றும் பெரிய பாதிப்புகளை தந்து விடாது. தோஷம் நிவர்த்தி செய்தாலும் தோஷம் உள்ள ஜாதகத்துடனே இணைப்பது தான் நல்லது என்கிறது சாஸ்திரம். செவ்வாய் வீரம், கம்பீரம், இரத்தம், உணர்ச்சியை தூண்டுதல், ஆண்மை, வீரியம் போன்றவற்றின் கிரகமாக இருக்கிறது. இதில் பிரச்சனை ஏற்படாமல் இருக்கவே தோஷம் உள்ளவர்கள் தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்து கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது. எனினும் அதன் தாக்கம் குறைய ஆடு மற்றும் குரங்குகளுக்கு உணவு அளிக்கலாம்.

புதன்:
புதன் கிரகத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குறைக்க பறவைகளுக்கு உணவு அளிப்பது நல்லது. தினமும் பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உங்களால் முடிந்த உணவினை அளித்து வரலாம்.

elephant

வியாழன்:
யானை அல்லது மாடு இவற்றிற்கு உணவு அளித்தால் குரு பகவானால் ஏற்படும் கெடு பலன்கள் நீங்கும். குரு பகவான் தரும் பிரச்சனைகளாக இருப்பது திருமண தடை மற்றும் கல்வியில் பிரச்சனைகள். இவை இரண்டும் மனிதனுக்கு முக்கியமானவை. எவ்வளவோ பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடவில்லையே என்று பல பரிகாரங்கள் செய்து கொண்டு இருக்கின்றனர். தோஷ நிவர்த்திக்கு யானைக்கு உணவு அளித்து பாருங்கள்.

சுக்கிரன்:
சுக்கிரனால் உண்டாகக் கூடிய பிரச்சனைகளை தவிர்க்க புறாவிற்கு தானியங்களை அளித்து வருவது நல்ல பலனை தரும்.

crow feeding

சனி:
சனீஸ்வரன் எனறு ஈஸ்வர பட்டதை பெற்ற கம்பீர கிரகம் சனி. எவர் கொடுப்பதையும் சனி தடுப்பார். சனி கொடுக்க யார் தடுப்பார்? அவரை போன்ற ஒரு வள்ளல் இல்லை. அவரின் ஆசி பெற கருப்பு நிற விலங்குகளுக்கு அல்லது பறவைகளுக்கு உணவு அளிப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே
உங்களுக்கு சந்திராஷ்டமமா? என்ன செய்தால் எளிதாக தப்பித்து கொள்ள முடியும் தெரியுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Graha dosham and pariharam. Thosam pariharam in Tamil. Thosam neenga. Graha dosham in Tamil. Dosha nivarthi.