வெள்ளை துணியில் கறை பட்டுவிட்டால் எதுவும் செய்யாதீங்க, இதை தேச்சா போதுமே! பழைய சட்டை கூட புதுசு போல வெள்ளையா இருக்கணுமா?

cloth-stain-shampoo-lemon
- Advertisement -

எப்போதும் துணி துவைக்கும் பொழுது கலர் துணிகள் தனியாகவும், வெள்ளை துணிமணிகளை தனியாகவும் துவைப்பது தான் முறையாக இருக்கிறது. தெரியாமல் சாயம் போகும் துணியுடன், வெள்ளை சட்டையை சேர்த்து விட்டால் அவ்வளவுதான், பிறகு அந்த வெள்ளைத் துணியை பயன்படுத்தவே முடியாமல் போய்விடும். தெரியாமல் வெள்ளை சட்டையில் கறை பட்டு விட்டால் முதலில் நாம் செய்ய வேண்டியது என்ன? பழைய வெள்ளை சட்டை கூட புதுசு போல ஜொலிக்க என்ன செய்யணும்? என்பது போன்ற வீட்டு குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக வெள்ளைத் துணிகளில் கறை பட்டு விட்டால், நாம் வேறு எதையுமே தேட வேண்டாம், நம் பாத்ரூமில் தலைக்கு குளிக்க பயன்படுத்தக்கூடிய ஷாம்பூ இருந்தால் போதும், கொஞ்சம் ஷாம்பூவை கறைப்பட்ட இடங்களில் தேய்த்து 10 லிருந்து 15 நிமிடம் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு நீங்கள் சாதாரணமாக துணி துவைப்பது போல துவைத்தாலே போதும், வெள்ளை துணியில் பட்ட கறை உடனடியாக நீங்கும்.

- Advertisement -

நாட்பட்ட கறையாக இருந்தால் ஷாம்பூ வேலைக்கு ஆகாது. அதற்கு பதிலாக நீங்கள் கொஞ்சம் சமையல் சோடாவை அதன் மீது தேய்த்துக் கொடுங்கள். அதன் பிறகு அரை மூடி எலுமிச்சை பழத்தை விட்டு ஊற விட்டு விடுங்கள். 20 நிமிடம் நன்கு ஊறிய பின்பு சுடு தண்ணீரில் நனைத்து தேய்த்தால் நாள்பட்ட கறைகள் கூட நொடியில் நீங்கும்.

எப்பொழுதுமே வெள்ளை துணிகள் பளிச்சுன்னு ஜொலிக்க, சுடு தண்ணீரில் துவைப்பது தான் நல்லது. இப்போது வாஷிங் மெஷினில் அதுவே ஹாட் வாட்டர் கொண்டு துவைத்து கொடுக்கிறது. முன்பெல்லாம் கொதிக்க வைத்த சுடுதண்ணீரில் சிறிதளவு சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து கலந்து வெள்ளை துணிகளை நன்கு ஊற வைத்து துவைப்பார்கள். மொற மொறன்னு புதுசாக வாங்கின துணி போலவே சூப்பரா இருக்கும். அயர்ன் பண்ணி போட்டா அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

- Advertisement -

கஞ்சி தண்ணி இல்லையா? உடனே கொஞ்சம் அரை பக்கெட் சுடுதண்ணீரில், கால் கை அளவு கல் உப்பு போட்டுக் கொள்ளுங்கள். உப்பு கரைந்ததும் துணிகளை போட்டு முக்கி வையுங்கள். நீங்கள் நேரம் கிடைக்கும் போது துணியை துவைத்து கொள்ளுங்கள். இப்படி வெள்ளை சட்டைகளை பராமரித்து வந்தால், எப்பொழுதுமே புதுசு போலவே இருக்கும். இதே முறையில் நீங்கள் பழைய வெள்ளை துணிகளை துவைத்து பாருங்கள். அழுக்குகள் எல்லாம் நீங்கி பளிச் பளிச்சுன்னு மின்னும்.

இதையும் படிக்கலாமே:
பல்லி விஷத்தன்மை வாய்ந்த உயிரினமா? பல்லி விழுந்த உணவு விஷமாக மாறுமா? மாறாதா? இந்த கேள்விக்கான சரியான பதில் இதோ உங்களுக்காக.

வெள்ளை துணியில் காபி, டீ கறை அல்லது சாம்பார், ரசம், எண்ணெய் போன்ற கறைகள் பட்டு விட்டால் அதில் சிறிதாக வினிகரை சேர்த்து ஷாம்பூ போட்டு ஊற வையுங்கள். அரை மணி நேரம் நன்கு ஊறிய பிறகு சுடுதண்ணீரில் முக்கி எடுத்து சாதாரணமாக சோப்பு போட்டு தேய்த்தாலே போதும், எல்லா கறையும் எங்க போனது? என்று தெரியாது, மாயமாய் மறைந்து போய்விட்டிருக்கும். பிரஷை வைத்து துணிகளை எப்பொழுதும் வறுக் வறுக் என்று தேய்த்து துணியை கிழித்து விடக்கூடாது. குறைந்தது ஒரு மணி நேரம் துணிகளை ஊற வைத்து துவைக்கும் பொழுது, அதிக அளவிற்கு பிரஷ்சை அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டிய அவசியமே இருக்காது. விடாப்பிடியான வெள்ளைத் துணியில் இருக்கக்கூடிய காலர் அழுக்குகள் நீங்க, எலுமிச்சையுடன், வினிகர் சேர்த்து ஊற வைத்து துவைக்கலாம்.

- Advertisement -