- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்வெள்ளை துணிகளை சுலபமாக துவைக்க சூப்பர் டிப்ஸ்

வெள்ளை துணிகளை சுலபமாக துவைக்க சூப்பர் டிப்ஸ்

- Advertisement -

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய சவால், தங்கள் பிள்ளைகளுடைய வெள்ளை துணிகளை துவைப்பது. சில நேரம் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளை துணிகளை துவைக்கவும் அதிகமாக சிரமம் உண்டாகலாம். வெள்ளை யூனிஃபார்ம், வெள்ளை ஷாக்ஸ் இவைகளை அழுக்கு போக துவைப்பதற்குள், இடுப்பு எலும்பும் கையும் உடைந்து போகும்.

இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஒரு சூப்பரான குறிப்பு. இந்த பதிவில் உங்களுக்காக. சும்மா இல்லைங்க. சலவைக்காரர்கள் துணிகளை வெளுப்பதற்கு இந்த டிப்ஸ்யும் பயன்படுத்துவாங்க என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வெள்ளைத் துணியை சுலபமாக துவைக்க டிப்ஸ்

துணிகளுக்கு தகுந்த அளவு சுடுதண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். துணிகள் மூழ்கும் அளவுக்கு மட்டும் சுடுதண்ணீர் தேவைப்படும். அதில் 1 கைப்பிடி அளவு கல் உப்பு, 1 எலுமிச்சம் பழத்தின் சாறு, துணி துவைக்கும் லிக்விட் 1மூடி, இந்த மூஞ்ச பொருட்களையும் போட்டு ஒரு குச்சியை வைத்து நன்றாக கலந்து விட வேண்டும் அந்த தண்ணீரிலிருந்து நுரை பொங்க வரட்டும்.

பிறகு எடுத்து வைத்திருக்கும் வெள்ளை துணிகளை இந்த தண்ணீரில் நனைத்து ஊற வைக்க வேண்டும். இந்த டப்புக்கு மேலே ஒரு மூடி போட்டு மூடி விடுங்கள். நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் இந்த துணி அப்படியே ஊறட்டும். மேலே சொல்லப்பட்டிருக்கும் இந்த அளவுக்கு 4 டு 5 வெள்ளை துணிகளை துவைக்கலாம்.

- Advertisement -

நான்கு மணி நேரம் சுடுதண்ணீரில் அந்த வெள்ளை துணிகள் ஊறி, அந்த துணிகளை எடுக்கும் போதே துணியில் இருக்கும் பாதி அழுக்கு தண்ணீரில் வந்திருக்கும். பிறகு எந்த இடத்தில் எல்லாம் அதிகமாக கறைகள் இருக்கிறதோ அந்த இடத்தில் மட்டும் பிரஷ் போட்டு தேய்த்து தண்ணீரில் அலசி காய வைத்துக் கொள்ளுங்கள். இவ்வளவுதான். உங்க வீட்ல சின்ன பிள்ளைகள் இருக்காங்க. அதிகம் வெள்ளை துணி பயன்படுத்துவீங்க அப்படின்னா, இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

வெள்ளைத் துணியில் பட்ட விடாப்பிடியான கறையை நீக்க டிப்ஸ்

வெள்ளைத் துணியில் ரீபில் பென் கிறுக்கல்கள், இங்க் ஏதேனும் பட்டுவிட்டால் அதன் மேலே கொஞ்சம் டெட்டால் ஊற்றி பல் தேய்க்கும் பிரஷ் வைத்து நன்றாக தேய்த்து விட்டாலே போதும். பேனா மை கறை சுலபமாக நீங்கிவிடும்.

- Advertisement -

துணிகளில் எண்ணெய் கறை பட்டுவிட்டால், அதன் மேலே முகத்திற்கு போடும் பவுடரை நன்றாக தூவி விடுங்கள். சிறிது நேரம் கழித்து ஒரு கரண்டியை வைத்தோ அல்லது ஸ்பூனை வைத்தோ அந்த பவுடரை எல்லாம் சுரண்டி எடுத்துவிட்டு, கறைப்பட்ட இடத்தில் ஷாம்பூ தடவி கசக்கி துவைத்தால் எண்ணெய் கறை முழுமையாக நீங்கும்.

துணிகளில் மஞ்சள் கறை பட்டு விட்டால் வெதுவெதுப்பான தண்ணீரில், கல் உப்பு எலுமிச்சம்பழம் சாறு போட்டு அந்த துணிகளை துவைத்து நல்ல வெயிலில் காய வைத்து விடுங்கள். மஞ்சள் கறை சுலபமாக நீங்கும்.

இதையும் படிக்கலாமே: மண்பாண்டத்தை பழக்கும் முறை

துணிகளில் காபி கறை, டீ கறை பட்டு விட்டால் தண்ணீரில் கொஞ்சம் பால் கலந்து கொள்ளுங்கள். இப்போது கறைபட்ட துணியை இந்த தண்ணீரில் ஊற வைத்து பிறகு, பேக்கிங் சோடா போட்டு அந்த கறை பட்ட இடத்தை துவைத்தாலே போதும். காபி கறை டீ கறை முழுமையாக நீங்கும்.

சற்று முன்